சினிமா

img

கமல் வீட்டில் கொரோனா நோட்டீஸ்: அதிகாரிகள் அகற்றம்

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப் படுகின்றன. கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர்களுக்கு கொரோனா தொற்றி ருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதால் அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் சார்பில், நோட்டீஸ் ஒட்டப்படுகிறது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல் ஹசனின் வீட்டில்  கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டது. சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள வீட்டில் மாநகராட்சி ஊழியர்கள் இந்த நோட்டீசை ஒட்டியுள்ளனர். அதில், கொரோனாவில் இருந்து எங்களைக் காக்க, சென்னையைக் காக்க, எங்களை தனிமைப்படுத் திக்கொண்டுள்ளோம் என கூறப்பட்டுள்ளது.  இந்த விவகாரம் கடும்

சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீசை அகற்றினர்.
கமல் வீட்டில் வேலை செய்தவர்களில் யாரோ ஒருவர் வெளிநாடு சென்று வந்ததால், அவரது பாஸ்போர்ட் முகவரியின் அடிப்படையில் அந்த வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. கமலின் பழைய முகவரி என தெரியாமல் நோட்டீஸ் ஒட்டப்பட்டதாக மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டது. முகவரியில் ஏற்பட்ட குழப்பத்தால் சிறிய தவறு நடந்திருப்பதாக மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளித்தார்
 

;