கல்வி

img

UPSC- சிவில் சர்வீஸ் தேர்வு : காலியிடங்கள் 796

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (UPSC) நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வின் மூலமாக 796 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேர்வின் பெயர்: UPSC- Civil Services Examinatian (2020)

காலியிடங்கள்: 796

காலியிடம் நிரப்பப்பட உள்ள மத்திய அரசின் துறைகள் பற்றிய விபரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: 1.8.2020 தேதியின்படி 21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும், அருந்ததியர் மற்றும் விதவை பிரிவினர்களுக்கு மத்திய அரசு விதிமுறைப்படி வயது வரம்பு தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை: தகுதியானவர்கள் UPSC-ஆல் நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வானது 2 கட்டமாக நடத்தப்படும். 

முதல்கட்ட தேர்வு நடைபெறும் நாள்: 31.5.2020.

தேர்வு நடைபெறும் இடங்கள்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர் ஆகிய இடங்களில் நடைபெறும். முதல்கட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இரண்டாம் கட்ட தேர்விற்கு தேர்வு செய்யப்படுவர். இரண்டாம் கட்ட தேர்வானது சென்னையில் நடைபெறும்.மேலும், தேர்விற்கான பாடத்திட்டம் மற்றும் மதிப்பெண்கள் விபரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். மேலும், அருந்ததியர் மற்றும் விதவை பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.upsconline.nic.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 3.3.2020. மேலும், கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்க வேண்டும். 

;