கல்வி

img

BIS- நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை

மத்திய அரசின்கீழ் செயல்படும் Bureau of India Standards நிறுவனத்தில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

பணியின் பெயர்: Scientist B

காலியிடங்கள்: 150

சம்பள விகிதம்: ரூ.87,000

வயது வரம்பு: 31.3.2020 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : காலியிடங்கள் உள்ள பாடப்பிரிவில் குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்களுடன் BE/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். (அருந்ததியர் பிரிவினர்களுக்கு 50 சதவிகிதம் மட்டும்). மேலும், 2018, 2019, 2020 போன்ற ஆண்டுகளில் நடைபெற்ற GATE தேர்வுகள் ஏதாவதொன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : GATE தேர்வு மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுவர். நேர்முகத்தேர்வு தில்லியில் வைத்து நடைபெறும். நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி மற்றும் இடம் மின்னஞ்சல் மூலம் சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். அருந்ததியர், விதவை பிரிவினர்கள், பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.bis.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 31.3.2020.

;