கட்டுரை

img

மோடி ஆட்சி : நீதித்துறையின் சுதந்திரத்திற்கு ஆபத்து - வழக்கறிஞர் பி.வி.சுரேந்திரநாத்ச்

மோடி அரசாங்கமானது, முகஸ்துதி செய்வதன் மூலமாகவும், மிரட்டல் மூலமாகவும், கடுங் கண்காணிப் பை ஏற்படுத்தியும், பல்வேறு வடிவங்களில் தொல்லை கொடுத்தும் நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிட்டு, அதனைப் பணியவைத்திடும் கலையில் வெற்றி பெற்றிருப்பதுபோலவே தோன்றுகிறது. மாநிலங்கள வைக்கு உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நியமனம் செய்யப்பட்டிருப்பது, இதுதொ டர்பான சமீபத்திய சூழ்ச்சித் திட்டமாகும். இது, மோடி அரசாங்கத்தால் இந்திய நீதித்துறை மீது ஏவப்பட்டுள்ள மற்றுமொரு அதிர்ச்சியளிக்கும் ஆபத்தாகும். இது நீதித்துறையின் நம்பகத்தன்மை, நேர்மை மற்றும் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் மற்றும் பொதுமக்கள் அதில் வைத்திருந்த நம்பிக்கை மீதான தாக்குதல் மட்டு மல்ல, இது இன்றைய நீதித்துறையின் இயல்பான குணத்தையும், நிலைமையையும், தகுதியையும், தரத்தை யும் பிரதிபலிக்கிறது.

ரஞ்சன் கோகோய் மாநிலங்களவை க்கு நியமன உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது, நீதித்துறை சுதந்திரத்தின் மீது உள்ளேயிருந்தும், வெளியேயிருந்தும் வெட்கக்கேடான முறையில் மீறிய செயலாகும். திருவாளர் கோகோய் 2019 நவம்பர் 17 அன்றுதான் வயது மூப்பின் அடிப்படையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். அவர் தலைமை நீதிபதியாக இருந்த காலம், மிகவும் சர்ச்சைக்கு ரிய காலமாகும். உச்சநீதிமன்றமானது, காஷ்மீர் பிரச்சனை, ரபேல் வழக்கு, அசாம் தேசியக் குடிமக்கள் பதிவேட்டு விவகாரம், சபரிமலை மறுஆய்வு மனு போன்ற முக்கியமான பிரச்சனைகளில் அடிப்படை உரிமைகளை யும், குடிமை உரிமைகளையும் பாதுகாக்கும் விதத்தில் விழிப்புடன் இருந்து செயல்படவில்லை என்று அனைத்துத் தரப்பினருமே விரிவான அளவில் உணரத் தலைப்பட்டி ருக்கிறார்கள். மேலும் உச்சநீதிமன்றமானது அரசு எந்திரத்தை தன்னுடைய செயல்கள் மூலமாகவும், செய லின்மை மூலமாகவும் மற்றும் பல விஷயங்களை கண்டு கொள்ளாது ஒதுக்கிவைத்திருப்பதன் மூலமாகவும் அதீதமாகவே பாதுகாத்துக் கொண்டிருப்பதாகவும் மக்கள் உணரத் தொடங்கி இருக்கிறார்கள்.

கோகோய் அவர்களே “நீதிபதிகள் ஓய்வு பெற்ற பின் நியமனம் செய்யப்படுவது நீதித்துறையின் சுதந்தி ரத்தின் மீதான வடு” என்று ஒருதடவை, கூறியிருந்தார். மேலும் அவர், நடுவர் மன்றங்களுக்கு (டிரிபூனல்களுக்கு), உறுப்பினர்களை மறுநியமனம் செய்வது தொடர்பான வழக்கில், கோகோய் தலைமையிலான அரசமைப்புச்சட்ட அமர்வாயம், நடுவர்மன்றங்களில் உறுப்பினர்களை மறு நியமனம் செய்வது தொடர்பாக நடுவர்மன்ற விதிகளில் இருந்த ஷரத்துக்களை ரத்து செய்தார். “மறு நியமனம் செய்வதற்கான ஷரத்து, உறுப்பினர்களின் சுதந்திரத்தை அரித்துவீழ்த்திவிடும். தாங்கள் மறுநியமனம் செய்யப்பட்ட தன் காரணமாக அதற்கேற்ற விதத்தில் தீர்மானித்திடு வதற்கான நிலைமையை மறைமுகமாக ஏற்படுத்திடும்,” என்று அந்தத்தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

அவர் மேலும், “ஓய்வுபெற்றபின் உறுப்பினர்கள் ஒரு நடுவர் மன்றத்தி லிருந்து, வேறொரு நடுவர் மன்றத்திற்கு மறுநியமனம் செய்யப்படுவதற்கு மத்திய அரசு அல்லது மாநில அரசுக்கு இருக்கும் விருப்புரிமையானது மக்கள் மத்தியில் நீதித்துறையின் மீது இருக்கும் நம்பிக்கையை சிதைத்து விடும். அது, இறையாண்மையின் முக்கியமான கால்களில் ஒன்றை இழப்பதற்கு ஒப்பாகும்,” என்றும் குறிப்பிட்டி ருந்தார். மேலும் அவர், “அரசு எந்திரத்தால் தலையீடுகள் அதிகரிப்பது, நீதித்துறையின் சுதந்திரத்தை ஆபத்திற்கு உள்ளாக்கிடும்,” என்றும் கூறியிருந்தார். இதே தரநிர்ண யத்தின்படி கோகோய், பாபர்மசூதி வழக்கின் தீர்ப்பு, ரபேலா வழக்கின் தீர்ப்பு ஆகியவற்றில், மோடி ஆட்சியின் கீழான அரசு எந்திரத்திற்கு ஆதரவாக அளித்த தீர்ப்புகளுக்குப் பரிசாகத்தான் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார் என்று எவரொருவரும் விமர்சனம் செய்வதைத் தடுத்திட முடியாது. நீதிபதி கோகோயின் சம்மதத்துடன்தான் மோடி அரசாங்கம் இவரை நியமனம் செய்திருக்கிறது என்று ஊகித்துக்கொள்ள முடிகிறது. நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாத்திட வேண்டும் என்றால் அவர், இந்த முன்மொழிவுக்கு சம்மதம் அளித்தி ருக்கக் கூடாது. நீதித்துறையின் அடிப்படைக் கொள்கையே, ‘நீதி வழங்குவது மட்டுமல்ல, அது எந்தவிதத்திலும் சந்தே கத்திற்கு அப்பாற்பட்டதாகவும் இருந்திட வேண்டும்’ என்ப தாகும்.

கோகோய் பிரச்சனை, தனித்த ஒன்று அல்ல. உச்சநீதி மன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி, பி. சதாசிவம் 2014 ஏப்ரல் 26 அன்று ஓய்வு பெற்றார். இதே மோடி அர சாங்கத்தால் நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் நேர்மை குறித்துக் கிஞ்சிற்றும் கவலைப்படாமல் அவர் 2014 ஆகஸ்டில் கேரள ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.

அரசு எந்திரத்திற்கு ஆதரவாக தீர்ப்புகள் அளித்த தற்காக சில நீதிபதிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டி ருக்கக்கூடிய அதே சமயத்தில், மோடி அரசாங்கத்திற்கு இணக்கமான முறையில் தீர்ப்பு அளிக்காத  நீதிபதிகள் பல்வேறு விதங்களில் துன்புறுத்தப்பட்டார்கள். உச்சநீதி மன்ற கொலீஜியம், நீதியரசர் கே.எம்.ஜோசப்பை உச்சநீதி மன்றத்திற்கு நீதிபதியாக பதவி உயர்வு அளித்துப் பரிந்து ரைத்ததை, அவர் ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தபோது, ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2016இல் குடியரசுத்தலைவர் ஆட்சியைப் பிரகடனம் செய்ததை, ரத்து செய்ததன் காரணமாக, கொலீஜியத்தின் பரிந்துரையை மோடி அரசாங்கம் அற்பக் காரணங்களைக் கூறி ஆரம்பத்தில் ஆட்சேபித்தது. மீண்டும் நீதியரசர் தீபக் மிஷ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற கொலிஜியம் அவரையே பரிந்துரை செய்தபோது, மோடி அரசாங்கம், அவரைப் பணியில் சேர விடாமல் சுமார் எட்டு மாத காலம் இழுத்தடித்தது.

நீதியரசர் ஜெயந்த் பட்டேல் 2016 ஆகஸ்ட் 13இலிருந்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்தார். வழக்கமான சூழ்நிலைகளில் அவர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக மாறியிருக்க வேண்டும். ஆனாலும், அவர் கர்நாடகாவிற்கு மாற்றப்பட்டார். கர்நாடகாவில், அவர் இரண்டாவது மூத்த நீதிபதி. அப்போது அங்கே தலைமை நீதிபதியாக இருந்தவர் பணி ஓய்வு பெற்றபின்னர் அவர்தான் தலைமை நீதிபதி யாக அமர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனாலும் அவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். அங்கே மூன்றாவது மூத்த நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றார். இவ்வாறு இவர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாவ தையோ, அல்லது உச்சநீதிமன்றத்திற்கு பதவி உயர்வு பெற்றுச் செல்வதையோ வேண்டுமென்றே தடுத்தனர். இவ்வளவுக்கும் முக்கியமான காரணம் என்னவென்றால், அவர், இஷ்ரத் ஜகான் என்கவுண்டர் கொலை வழக்கில் மோடி அரசாங்கத்திற்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்க வில்லை என்பதேயாகும்.

நீதியரசர் அகில் அப்துல் ஹமீத் குரேசி அவர்கள் திருவாளர் நரேந்திர மோடி மற்றும் திருவாளர் அமித் ஷா ஆகியோருக்கு எதிராக தீர்ப்பு அளித்திருந்தார். இவர், உச்சநீதிமன்ற கொலீஜியத்தால் மத்தியப்பிரதேச உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்திடப் பரிந்துரைக்கப்பட்ட சமயத்தில், மத்திய அரசாங்கம் அதனை ஆட்சேபித்தது. 2019 செப்டம்பரில் திருவாளர் ரஞ்சன் கோகோய் தலைமையிலான கொலீஜியம் முந்தைய பரிந்துரையை மாற்றியமைத்து, நீதியரசர் குரேஷியை திரிபுரா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யாக நியமனம் செய்து பரிந்துரைத்தது. அதே சமயத்தில், குஜராத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவி காலி யானபோது, (அங்கு தலைமை நீதிபதியாக இருந்தவர், உச்ச நீதிமன்றத்திற்குப் பதவி உயர்வு பெற்று சென்றார்), நீதியரசர் குரேஷிதான் நடைமுறைப் பழக்க வழக்கங்க ளின்படி குஜராத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக அமர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர், பம்பாய் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். திரிபுரா உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்து மாற்றப்பட்ட பரிந்துரைக்குப் பின்னரும்கூட, மத்திய அரசாங்கம் அதனை இழுத்தடித்தது.

நீதியரசர் விஜயா தஹில்ரமணி, சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர், மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். தன்னுடைய மாற்றலை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டிருந்த மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, கண்ணி யமான முறையில் அவர் நீதித்துறையிலிருந்தே வெளி யேறினார்.

நீதியரசர் முரளிதர், தில்லி வன்முறை வெறியாட்டங்க ளில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆம்புலன்ஸ் வண்டிகளை வரவழைத்திட துரிதகதியில் நடவடிக்கை எடுத்தார் என்பதற்காகவும், வெறுப்புப் பேச்சுக்களை உமிழ்ந்த நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர் மீதும் மற்றும் முன்னாள் எம்எல்ஏ-யும், பாஜக தலைவருமான கபில் மிஷ்ரா மீதும் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்ய வேண்டும் என்றும் கடுமையான முறையில் உத்தரவிட்டு, வழக்கை மறுநாள் பிப்ரவரி 27க்கு ஒத்தி வைத்தார். ஆனால் அவர் 27ஆம் தேதி அந்த வழக்குகளை விசாரிக்க முடியாத விதத்தில் 26ஆம் தேதி இரவே மாற்றப்பட்டார்.

இவை அனைத்தும் மோடி அரசாங்கம் நீதித்துறை யின் சுதந்திரத்தில் வெட்கங்கெட்ட முறையில் தலையிட்டி ருப்பதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

கட்டுரையாளர் : பொதுச் செயலாளர், 
அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் 
தமிழில் : ச.வீரமணி

;