திங்கள், ஆகஸ்ட் 3, 2020

கட்டுரை

img

கொரோனாவின் வேகத்தை குறைத்த மும்பை மாநகராட்சி

மும்பை:
மக்கள் நெருக்கம் மிகுந்த மும்பை மாநகராட்சியில்  தீவிரமான வைரஸ் பரவலை திட்டமிட்ட நடவடிக்கைகளின் காரணமாகக் கட்டுக்குள் கொண்டு வருவதில் பிரிகன் மும்பை பெருமாநகராட்சி ஓரளவு வெற்றி பெற்றுள்ளது.நூறு நாட்களுக்கு முன்பு (மார்ச் 11) மும்பையில் கோவிட் 19 கண்டறியப்பட்டபோது இருந்தநிலைமை மாறி, இனியும் மும்பை கொரோனா வைரசின் தலைநகர் கிடையாது என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

இப்போது நாட்டின் தலைநகர் தில்லியில்தான் கோவிட் 19 தொற்று பரவல் அதிகரித்துக்கொண்டு வருகிறது. மும்பை, தில்லி பெருநக ரங்களை ஒப்பிடுவது தவிர்க்க முடியாதது. ஜுன் 24 அன்று தில்லியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70000, மும்பையில் 69528ஆக  இருந்தது. பரிசோதனைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தபோது தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தில்லி, மும்பை இரண்டிலும் ஒன்றையொன்று போட்டி போட்டுக் கொண்டிருந்தது.தில்லியில் பாதிப்பு விகிதம் 16.7 %, மும்பையில் 23.2% என்றிருந்தது.இது  சேரிப் பகுதிகள் மிகுந்த, கடுமையான மக்கள் நெருக்கமிக்க மும்பையில் கொரோனா வைரஸ் நீண்ட காலமாகவே நிலைகொண்டு இருந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது. கொரோனாவுக்கு எதிராகப் போரிட “தொற்றே இல்லாத நிலையடைவோம்” (mission zero) எனும் அதிவேக செயல்திட்ட த்தை மும்பை மாநகராட்சி உருவாக்கியது. அதன்படி, 50 ஆம்புலன்ஸ் மருத்துவ மனைகளில் மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ ஊழியர் களைக் கொண்ட குழுவினர் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில், ஒரு வார்டுக்கு தலா 10000 வீடுகளில் சோதனைகளை நடத்தினர். இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதலளித்த தென்கொரியாவின் ரேபிட் ஆண்டிஜென் கருவிகளைக் கொண்டு அரை மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகள் கண்டறியப்பட்டன.

தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு இதயநோய், ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்கள் உள்ளனவா என்பதும் உறுதிசெய்யப்பட்டது. சேரிப் பகுதிகளில் உள்ள கழிப்பறைகள் தினமும் ஐந்து முறை கிருமிநாசினிகளால் சுத்தம் செய்யப்பட்டன. முன்பு, வாரம் முழுவதும் இருபத்து நான்கு மணிநேர மும் இயங்கும் கொரோனா  கட்டுப்பாட்டு அறையில் இருந்து நோயர்களுக்கு செல்லவேண்டிய மருத்துவமனை விபரம் தெரிவிக்கப்பட்டு வந்தது. இது, பாதிக்கப்பட்டவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாலும், குழப்பங்கள் ஏற்படுவதாலும், இப்போது, மருத்துவக் குழுவே அவர்களின் வீட்டுக்கு சென்று உரிய கவுன்சிலிங் அளித்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாவது 36 நாட்கள் என்ற நிலைமையை, ஐம்பது நாட்களாக அதிகரிக்க மும்பை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. தொற்று பாதிப்பு எண்ணிக்கை எத்தனை நாட்களில் இரு மடங்காகிறது என்பது தொற்றும் பரவலின் வேகத்தைக் காட்டுவதாகும். மும்பை மாநகராட்சியின் திட்டமிட்ட நடவடிக்கைகளின் விளைவாக, மும்பையில்  கொரோனாவால் மரணமடைவோர் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைந்து வருகிறது.இப்போது தாராவியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரட்டிப்பாவதற்கான நாட்கள் 42 ஆக அதிகரித்துள்ளது. இந்திய சராசரி இரட்டிப்பு நாட்கள் 16 என்று இருக்கும் நிலைமையில் இது நல்ல முன்னேற்றமே.

பிரண்ட்லைன் ஜீலை 17,2020 இதழில் 
லைலா பாவதம் எழுதிய செய்திக் கட்டுரையிலிருந்து
- தொகுப்பு: ம.கதிரேசன்

;