கட்டுரை

img

ஜம்மு-காஷ்மீர் குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை

புதுதில்லி,ஆக.13- ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.  ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களிடம் கருத்து கேட்காமல் மத்திய பாஜக அரசு அராஜகமாக அந்த மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.  ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் தனி யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டதை அடுத்து  அதனை மறுசீரமைப்பது தொடர்பான வரையறை குறித்து புதுதில்லியில் செவ்வாய்கிழமையன்று தலைமை தேர்தல்  ஆணையம் ஆலோசனை மேற்கொண்டது. இந்த ஆலோச னைக் கூட்டத்தில்தலைமை தேர்தல் ஆணையர், 2 துணை ஆணையர்கள் மற்றும் மூத்த தேர்தல் அதிகாரிகள்  பங்கேற்றுள்ளனர்.

;