கட்டுரை

img

காஷ்மீர் மக்கள் காட்டிக் கொடுக்கப்பட்டார்கள்! - அமித் பரூவா, பத்திரிகையாளர்

 தற்போது அவர்கள் அச்சப்படுவது எல்லாம் வெளியாட்களால் தங்களது சொந்த நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு விடும் என்பதும் இதுவரை தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசுப்பணி வேலைகள் பிற மாநிலத்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுவிடும் என்பதும்தான். இந்த கவலை காஷ்மீர் பகுதி மக்களை மட்டுமல்ல. ஜம்மு, லடாக் பகுதி மக்களுக்கும் இந்த கவலை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 5ல் நாடாளுமன்றத்தின் மூலம் ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அதிகாரங்களை குறைக்கும் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் காஷ்மீரில் இந்திய ஆதரவு அரசியலமைப்பு பகுதியினையே பி.ஜே.பி காலிசெய்து விட்டது. தேசிய மாநாடு மற்றும் பி.டி.பி. கட்சிகள் போன்ற இந்திய ஆதரவு கட்சிகளின் வாயில்களை அடைத்தது மட்டுமல்ல; காலங்கால மாக பிரிவினைவாதிகளை, மதவாத சக்திகளை எதிர்த்து நின்ற பல லட்சக்கணக்கான காஷ்மீர் இந்தியர்களின் வாயில்களையும் சேர்த்து அடைத்து விட்டது. தெருக்களில் உள்ள சாதாரண மக்களுடனும் அலுவ லர்கள், பல்கலை. ஆராய்ச்சியாளர்கள், பணியிலிருந்த காவலர்கள் மற்றும் அங்குள்ள பத்திரிகையாளர்களுடனும் இந்த மாத துவக்கத்தில் பேசிக்கொண்டிருந்த போது காஷ்மீரிலும் இதர பகுதிகளிலும் ஒருமித்த கருத்துக்கு வரமுடிந்தது- இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் ஒரு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று! 

1989 நாடாளுமன்றத்தேர்தல் புறக்கணிப்பு காலத்திலிருந்தே துப்பாக்கிச்சூடுகளும் கொலைகளும் கல்லெறிச்சம்பவங்களும் ஹர்த்தால்களும் காஷ்மீர் பள்ளத்தாக்கு வாழ்க்கையில் ஒரு தொடர்ந்த வழக்கமான பகுதியாகப் போய் விட்டது. ஆனால் இதன் ஒவ்வொரு கட்டங்களும் ஒவ்வொரு மாதிரியாக புதிய கொடூரமான முகங்களை எதிர்கொள்ள வேண்டிய சோகமான நிகழ்ச்சி களாக மாறி விட்டது. ஆனால் இந்த ஆகஸ்டில் காஷ்மீ ருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கி வெளியார் யாரும் நிலங்களை வாங்கிக் குடியேறலாம் என்ற சட்டத்திருத்தத் திற்குப் பிறகு காஷ்மீர் புதிய அதிபயங்கரமான சோகங்களை திறந்து விட்டிருக்கக்கூடிய பள்ளத்தாக்காக மாறி விட்டது.

பள்ளத்தாக்கில்  இயல்பு நிலையே இல்லை

ஸ்ரீநகரில் பெரும் அளவிலான பாதுகாப்புப் படை வரிசைகளை பார்த்தும் துப்பாக்கிச் சூடு செய்திகளை சேகரிப்பதும்தான் 1990ஆம் ஆண்டுகளில் பத்திரிகையாளர் என்ற வகையில் எனக்கு ஒப்படைக்கப்பட்ட பணி. ஆனால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் தற்போது குவிக்கப்பட்டுள்ள அளவுமீறிய துணைராணுவப் படைகளை பற்றிய செய்தி களை சேகரிக்கும் அளவிற்கு நான் தயாராக செல்லவில்லை. ராணுவத்தை தவிர்த்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் காவல்துறையினருமாக நெடுஞ்சாலைகளையும் தெருக்களையும் ஆக்கிரமித்துள்ளனர்.

நான் சென்று பார்த்த கண்ட்வாரா எனும் கிராமத்திற்கு அப்பால் 20 கி.மீ. வரை ராணுவத்தினரை காண முடிந்தது. காலை 7 மணி முதல் 10.30 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்பட்டு பகல் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது வழக்கமாக மாறி விட்டது. தனியார் வர்த்தக வாகனங்கள் மட்டுமே சாலைகளில் தென்படுகின்றன. கடந்த90 நாட்க ளாக இணையதள வசதி ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை 3 மணி நேரம் மட்டுமே கடைகள் திறந்து வைக்கப்பட்டு அடைக்கப்பட்டு விடுவதால் சகஜநிலையே தென்பட வில்லை. இனிமேல் சகஜநிலையே கிடையாது என காஷ்மீர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் ஒருவர் கூறுகிறார். பாதுகாப்புப் படையினருக்கும் மக்களுக்கும் அச்சமூட்டும் வகையில் தொடர்ந்து கொண்டிருந்த வன்முறை மோதல்கள் தற்போது இல்லையெனினும் பெரிய அளவிலான எதிர்ப்புப் போராட்டங்கள் இன்மை காரணமாக மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட நீர்த்துப் போக வைக்கப்பட்ட 370 மற்றும் ரத்துசெய்யப்பட்ட 35ஏ சட்டத்திருத்தங்களை மக்கள் ஏற்றுக்கொண்டதாக அர்த்தமல்ல.

அரசியல் சட்டத்தின் 370 ஆவது பிரிவு தொடர்ந்து வந்த அரசுகளால் செல்லரித்துப் போகச்செய்யப்பட்டு விட்டது. தற்போது பா.ஜ.க. அரசால் ரத்து செய்யப்பட்டது மீதமிருந்த ஓடு மட்டுமே என்பதை அனைத்து காஷ்மீர் மக்களும் நன்கு அறிந்துள்ளனர். தற்போது அவர்கள் அச்சப்படுவது எல்லாம் வெளியாட்களால் தங்களது சொந்த நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு விடும் என்பதும் இதுவரை தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசுப்பணி வேலைகள் பிற மாநிலத்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுவிடும் என்பதும்தான். இந்த கவலை காஷ்மீர் பகுதி மக்களை மட்டுமல்ல. ஜம்மு, லடாக் பகுதி மக்களுக்கும் இந்த கவலை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. வீட்டுச் சிறைகளிலும் ஹோட்டல்களிலும் அடைத்து வைக்கப்பட்டுள்ள மாநிலத்தின் அரசியல் தலைவர்களின் மீது கடும் கோபமும் நிந்தனையும் கொண்டுள்ளனர் காஷ்மீர் மக்கள். மோடி-அமித்ஷா கூட்டணியின் சதிவேலைகள் இவர்களுக்கு முன்னமே தெரியும் என ஒரு பகுதி மக்களும் ஊழல்வாதிகளான இவர்களை சிறையில் தள்ளி யது சரியே என சிலரும் கருதுகின்றனர். பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து வைக்கப்பட்டுள்ள மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் ஊழல் காரணமாக இருக்க லாம் என கண்ட்வாரா நகரை சேர்ந்த ஒரு அரசுப்பணியாளர் கூறுகிறார். 

கைவிடப்பட்ட அரசமைப்புச்  சட்ட உத்தரவாதம்

அரசமைப்புச்சட்ட உத்தரவாதத்தை மிக எளிதாக நீர்த்துப் போக வைக்க முடியும் என்ற உணர்வு துயரார்ந்த மக்களிடத்தில் கோபத்தை மேலோங்கச் செய்துள்ளது. ஆகஸ்ட் 5க்கு பிறகு தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள் மீதான உச்சநீதிமன்ற அணுகுமுறை ஜனநாய கத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதாக மக்கள் நினைக்கின்ற னர். எங்களுடைய குழந்தைகள் இணையதள வசதியின்றி படிக்க முடியாது; ஜி.எஸ். டி. கணக்குகளை தாக்கல் செய்ய முடியாது; விமான டிக்கெட்டுகள் கூட பதிவு செய்ய முடியாது; இவைகளைப்பற்றி யாராவது கவனத்தில் கொண்டுள்ளனரா என்று ஓய்வூதியர் ஒருவர் வினா எழுப்பினார்.

தற்போது காஷ்மீரில் பிரிவினைவாதிகளின் பிரச்சார யுத்தத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. 1975ல் இந்தியாவுடன் சேர்ந்து ஒத்துப்போன ஷேக் அப்துல்லாவின் பெருமைகளை சீர்குலையச் செய்து வந்த பிரிவினைவாதிகள், இந்தியாவை எப்போதும் நம்பாதீர்கள் என பிரச்சாரம் செய்து வந்தனர். பெரிதும் செல்லரித்துப் போக வைக்கப்பட்டுள்ள காஷ்மீரின் சுயாட்சி உரிமைகள் பிரிவினைவாதிகளுடைய திட்டங்களுக்கு தற்போது தீனி போட்டுள்ளது. மக்களுடைய இந்த அதிருப்தி பெரும் நாசம் விளைவிக்கக்கூடிய திட்டங்க ளை செயல்படுத்துவதற்கு பயன்படுத்தக்கூடிய வகையில் புதிய இளைஞர்களை தேர்ந்தெடுத்து சேர்த்துக் கொள்வ தற்கான பெரிய களத்தை ஜிகாதி குழுக்களுக்கு வழங்கி யுள்ளது.

370ஆவது பிரிவு என்பது வெறும் தோல் மட்டுமே. சதை இல்லை. அந்த தோலும் தற்போது உரிக்கப்பட்டுள்ளது என ஒரு பத்திரிகையாளர் மிக கவலையுடன் கூறுகிறார். நாங்கள் எப்போதுமே இந்தியாவுக்கு ஆதரவாகப் பேசுப வர்கள். அந்தப் பேச்சுக்களும் தற்போது வெடுக்கென பறிக்கப் பட்டுள்ளது. ஒவ்வொருவரிடத்திலும் பேசும்போது ஏறக்குறைய அவர்கள் அனைவரும் சொன்னது என்ன வென்றால் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீநக ருக்கு வந்த போது அதனை எதிர்த்த முழு அடைப்புப் போராட்டத்தில் அழைப்பு விடுக்கப்படாமலே புறத்தூண்டுதல் இன்றி தன்னார்வமாகவும் முழுமையாகவும் மக்கள் பங்கேற்றனர் என்பதுதான்.

மாநிலத்தின் மீதான அரச வல்லமை

மாநில நிலப்பரப்பின் மீதான அரசவல்லமை பறைசாற்றப்பட்டுள்ளது என்பதில் ஐயமில்லை. ஆனால் 30ஆண்டுகளுக்கு முன் போராளிக் குழுக்களால் வெடிக்கப் பட்ட குண்டுகள் துவங்கி தற்போது காஷ்மீர் ஒரு, ஆட்சிக்கெ திரான கலகப்பகுதியாக முழுமைப்படுத்தப்பட்டுள்ளது. 370ஆவது அரசமைப்புச்சட்ட ரத்து என்பது ஆர்.எஸ். எஸ் சித்தாந்தத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டு முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நடவடிக்கை என்பதற்கானதைவிட போராட்டங்களை நடத்துவதற்கான தகவல் தொடர்பு கருவி கள் முடக்கப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்ட கோபம்தான் மக்களிடம் மேலோங்கி நிற்கிறது. 

காஷ்மீரில் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டது பற்றி சர்வதேச அரசியல் தலைவர்கள் ஏதும் குறிப்பிடத்தக்க அளவில் கருத்துக்களை வெளியிடவில்லை என்பதை பி.ஜே.பி. தனக்கு சாதகமாக நினைத்த நேரத்தில் சமீபத்தில் புதுதில்லி வந்த ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல்  காஷ்மீரில் தற்போதுள்ள நிலைமைகள் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல என்று குறிப்பிட்டுச் சென்றது அரசை நிமிர்த்தி உட்காரச் செய்திருக்க வேண்டும்.  எதிர்வரும் நாட்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம். அரசு அதில் அவசரப்படவில்லை. காலம் அரசின் பக்கம். காஷ்மீரிகள் கூட இல்லாமல் செய்யப்படலாம். ஆனால் இந்தியாவில் இது என்ன மாதிரியான ஜனநாயகம் என்ற கேள்வி முன்னுக்கு வந்துள்ளது. 

பன்மைத்துவமும் வேற்றுமையில் ஒற்றுமையும் கலங்கரை விளக்கமாக திகழ்ந்த காலத்தில் காஷ்மீர் இந்தி யாவுக்கு சிறப்புச் சேர்த்தது. பன்மைத்துவ அணுகுமுறை தற்போது சுக்கு நூறாக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் நிலப்பரப்பு மட்டுமே தற்போது நம்முடையது. மக்களோ கசப்பும் கோப மும் கொண்ட ஒதுக்கி வைக்கப்பட்ட மனோநிலையிலும் உள்ள னர். குணப்படுத்தக்கூடிய வார்த்தைகளை நமது அகராதியில் இருந்து எடுத்து விட்டோம். ஆனாலும் காஷ்மீரிகள் மதிநுட்ப முள்ள மிடுக்கான சாதுரியமிக்க நாகரீகமானவர்கள்!

நன்றி : இந்து, 11.11.2019
தமிழாக்கம்: சி.எம்.இப்ராகிம் 

;