கட்டுரை

img

தொழிலாளிக்கு மட்டுமல்ல; சிறு குறு முதலாளிக்கும்! - பேரா.பிரபாத் பட்நாயக்

இலட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர் கள் மாநிலம் விட்டு மாநிலம், கைகளில் காசில் லாமல், உண்ண உணவில்லாமல், தங்கும் இடம் இல்லாமல், தங்களுடைய சொந்த கிரா மங்களை நோக்கி, கடும் பிரயாசையுடன், மிகுந்த சோர்வு டன் நடந்து கொண்டிருக்கிறார்கள்.  இப்படி திரும்பிக் கொண்டிருக்கும் வழியில் இன்னும் பல பேர், மிக மோச மான தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளது போல் அடைக்கப்பட்டுள்ளனர். 

மூடு திரையின் கீழ் உரிமைகளின் மீது தொடுக்கப்பட்டுள்ள போர்

இந்தச் சூழலில், ஊரடங்கு என்ற மூடு திரையின் கீழ், தொழிலாளர்களின் உரிமைகளின் மீது ஒரு மிகப் பெரிய போர் தொடுக்கப்பட்டுள்ளது.  பாரதிய ஜனதா கட்சி எந்த அரசி யல் உள்நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதோ, அந்த உண்மையான அரசியல் உள் நோக்கத்திற்கு சிறிதும் வஞ்ச மில்லாமல், தன்னுடைய மாநில அரசாங்கங்களின் மூல மாக  தொழிலாளர்களுக்கு எதிராக இன்று ஒரு வர்க்கப் போரினைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.

ஒரு அவசரச் சட்டத்தின் மூலமாக, தொழிலாளர் நலச் சட்டங்களில்   நான்கு சட்டங்களை தவிர மீதி அனைத்தை யும்  மாநிலத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் மூன்றா ண்டுகளுக்கு அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று உத்தரப்பிரதேச மாநில அரசாங்கம் கூறியுள்ளது.   புதிதாகத் துவங்கும் நிறுவனங்களில் 1000 நாட்களுக்கு தொழிலாளர் நலச் சட்டங்களை அமலாக்க வேண்டிய அவ சியம் இல்லை என்று மத்தியப் பிரதேச மாநில அரசு கூறி யுள்ளது.  இதே போன்ற நடவடிக்கைகளை குஜராத் மாநில அரசும் எடுத்துள்ளது.  கர்நாடக அரசும் இது போன்ற நட வடிக்கைகளை பின்பற்றத் திட்டமிட்டுள்ளது.  பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசாங்கங்கள் இந்த அளவிற்கு போகவில்லை என்றாலும், வேலை நாளை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக அதிகரித்துள்ளன. 

எளிதில் கடந்து செல்லும் விஷயமல்ல!

தொழிலாளர் நலச் சட்டங்களை நிறுத்தி வைப்பது என்பது வெறுமனே கடந்து செல்லும் விஷயமல்ல.  இதன் பொருள் - முதலாளிகள் நினைத்த போது நினைக்கும் தொழிலாளியை வீட்டிற்கு அனுப்பலாம் என்பது; குறைந்த பட்ச கூலியை நிர்ணயிக்க வேண்டும் அல்லது உயர்த்த வேண்டும் என்பதல்ல.  அது மட்டுமல்ல;  முதலாளிகள் தங்க ளது தொழில் நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு போது மான வெளிச்சத்தை, காற்றோட்டத்தை, உட்காரும் வசதியை, முதலுதவி உபகரணங்களின் இருத்தலை, பாது காப்பு ஏற்பாடுகளை, கேன்டீன் வசதி, குழந்தைகள் காப்பக வசதி போன்றவற்றை உத்தரவாதப்படுத்த வேண்டிய அவசி யம் இல்லை என்பதும் ஆகும்.  இன்னும் சொல்லப் போனால்,  வேலைக்கிடையில் ஒரு தொழிலாளிக்கு தேவை யான ஓய்வு நேரத்தைக் கூட அந்த முதலாளி அளிக்க வேண்டிய அவசியமில்லை என்பது உட்பட அனைத்தும் சேர்ந்துதான், ”தொழிலாளர் நலச் சட்டங்களை நிறுத்தி வைப்பது” என்பதில் அடங்கியுள்ளது.  (ஆதாரம் தி ஹிந்து, மே 8). 

19ஆம் நூற்றாண்டின் நிலைக்கு

இனிமேல் இது போன்ற மோசமான சூழல்  சிறு தொழில் நிறுவனங்களில் மட்டுமல்ல; பெரு நிறுவனங்களி லும்  மோசமான, சீர்கேடான நிலை தான் இருக்கும் என்பது தான். இதையே வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், கார்ல் மார்க்சும் ஏங்கெல்சும் 19ம் நூற்றாண்டில் பிரிட்டனின் தொழிற்சாலைகள் குறித்து எழுதிய நிலைக்கு நமது நாட்டின் தொழில் துறை போய்விடும் என்பது தான்.   இரண்டு நூற்றா ண்டுகள் போராடிப் பெற்ற அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டு மீண்டும் பழைய நிலைக்கே தொழிலாளி வர்க்கம் தள்ளப்படும் என்பது தான் இதன் பொருள். 

தொழிலாளி வர்க்கத்தின் மீது தொடுக்கப்படும் இந்தப் போருக்கு நியாயம் கற்பித்து முன்வைக்கப்படும் வாதங்க ளில் ஒன்று - இதனால் மூலதனம் தன்னுடைய முத லீட்டினை அதிகரிக்கும், அதன் காரணமாக அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பது.  அதிலும் குறிப்பாக, அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் வர்த்தகப் போர் நடந்து வரும் தருணத்தில், அந்நிய கம்பெனிகள் தங்களது மூல தனத்தை முதலீடு செய்ய வேறொரு நாட்டினை தேடுகிறது; இந்நிலையில், நம் நாட்டில் தொழிலாளர் நலச் சட்டங்களை அமலாக்காமல் நிறுத்தி வைத்தால் அதிக மூலதனத்தை நம் நாட்டை நோக்கி ஈர்க்க முடியும் என்று வாதிடப்படுகிறது.  ஆனால், இந்த வாதம் முற்றிலும் தவறானது என்பதை நம்மால் பல காரண காரியங்களுடன் விளக்க முடியும். 

தவறான வாதங்கள்

முதலாவதாக, வேலை செய்யும் பணிச்சூழல் தொழி லாளிகளுக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்பது ஒரு தொழிலாளியின் உரிமையாகும்.  அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுடன் இந்த உரிமைகள் எல்லாம் இணைக்கப்படவில்லை என்றா லும், அவை அடிப்படை உரிமைகளுக்கு சற்றும் குறைந் தவை அல்ல.  அடிப்படை உரிமைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது எந்த அளவிற்கு முக்கியத்துவம் பெறு கிறதோ அதே அளவிற்கு தொழிலாளர்களின் பணிச் சூழல் குறித்த அனைத்தும் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என்பதும் முக்கியத்துவம் பெறுகிறது.  அந்நிய மூலதனத்தி னைக் கவர வேண்டும் என்பதற்காகவும், சீனாவை விட அதிகபட்ச அந்நிய மூலதனத்தை ஈர்க்க வேண்டும் என்ப தற்காகவும், தொழிலாளர்களிடையே எந்தவித வாக்கெடுப் பும் நடத்தாமல், கருத்துக் கேட்பும் இல்லாமல், குறைந்த பட்ச எதிர்ப்பினைக் கூட பதிவு செய்ய விடாமல், உடனடியாக எந்தவித காலதாமதமும் இல்லாமல் தொழிலாளர் நலச் சட்டங்களில் மாற்றம் கொண்டுவரும் முயற்சி எடுக்கப் பட்டுள்ளது. ஆனால் அப்படி கொண்டு வர முடியாது. 

உண்மையில், நமது நாட்டில் தொழிலாளர் நலச்  சட்டங்கள் என்பவை, தொழிலாளி வர்க்கத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் பொருந்துவதாக, பொதுவான நடை முறைக்கு உகந்ததாக அனைத்துத் தொழிலாளர்களின் நலன்களையும் உள்ளடக்கி பாதுகாப்பதாக இல்லை.  சிலபிரிவினருக்கு மட்டுமே பொருந்துவதாக இருக்கிறது.  அப்படிப்பட்ட சூழலில், தற்போது எடுக்கப்படும் இந்த முயற்சி கள் மிகத் தவறானவை. வேறு வார்த்தைகளில் சொல்வ தென்றால், அந்தந்த நாட்டின் தொழிலாளர்களின் நிலைக் கேற்ப,  பணிச்சூழல் எவ்வாறு இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு நிறைவேற்றப்படுவது தான் தொழிலா ளர் நலச் சட்டங்களே தவிர, அந்நிய மூலதனத்தை ஈர்ப்ப தற்காக சந்தர்ப்பவாத நிலையை எடுப்பதற்கு அல்ல.   எனவே, அவற்றை இஷ்டம்போல் மாற்ற முடியாது. 

இரண்டாவதாக, தொழிலாளர் நலச் சட்டங்கள் தான் நமது நாட்டிற்கு வரும் மிகப் பெரும் முதலீடுகளை வர விடா மல் செய்கின்றன என்று கூறப்படுவது முற்றிலும் தவறான வாதமாகும்.  இதனை நிரூபிக்க அவர்களிடம் ஒரு சிறு ஆதா ரம் கூட இல்லை.  உண்மையில், சில வருடங்களுக்கு முன்பு, நவீன தாராளமயமாக்கல் கொள்கைகள் அமலாக்க நட வடிக்கைகள் நடந்து கொண்டிருந்தபோது, அதன் ஆதரவா ளர்களாக இருந்த முதலாளித்துவ பொருளாதார வல்லுநர் கள், இந்திய தொழில் துறையின் வளர்ச்சிக்கு தொழிலாளர் நலச் சட்டங்கள் முட்டுக்கட்டையாக இருக்கின்றன என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.  ஆனால், இவையெல்லாம் தவறு என்று மிகப் பொருத்தமாக நிரூபித்த பிறகு, இது மாதி ரியான வாதங்களை முன்னிறுத்துவதை கைவிட்டார்கள்.

கோட்பாட்டு ரீதியாகவும்  தவறான வாதமே!

அந்நிய நேரடி மூலதனம், அதனுடைய வருகை என்ப தையெல்லாம் ஓரமாக வைத்துவிட்டு, கோட்பாட்டு ரீதியாக இவர்கள் முன் வைக்கும் வாதம் சரியானதா என்று பார்த்தால் கூட அதுவும் தவறானதாகவும் பொருளற்றதா கவும் தான் இருக்கிறது.  இன்றைய கார்ப்பரேட் சந்தையில், ஒற்றை ஏக போகமும் குழு ஏகபோகமும் நிலவுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான சந்தையில், சந்தைப் பங்கில் மாற்றம் ஏற்பட பொதுவாக நீண்ட காலமாகும்.   ஏனெ னில், ஒரு சரக்கின் ஒட்டுமொத்த கிராக்கியில் எதிர்பார்க்கப் படும் வளர்ச்சிக்கு இணையாகவே, எந்த ஒரு நிறுவனத் திற்கான கிராக்கியின் வளர்ச்சியும் இருக்கும்.   எந்த ஒரு நிறுவனத்தின் மூலதனத்தையும், எதிர்பார்க்கப்படும் சந்தை வளர்ச்சியே தீர்மானிக்கிறது.  அதாவது, ஒரு நிறுவனம் சந்தையின் வளர்ச்சியை மையமாக வைத்தே தன்னுடைய முதலீட்டினை  தீர்மானிக்கிறது.  மாறாக, லாப விகித மாற்றம் இதன் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவ தில்லை.  தொழிலாளர் நலச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு தொழிலாளர்களின் கூட்டுப் பேரசக்தி பலவீனப்படுத்தப் பட்டு, அதன் காரணமாக தொழிலாளர்களின் கூலியை குறைத்தாலும் கூட, லாப விகிதம் தான் உயருமே தவிர மூல தனம் வளர்ச்சி பெறாது.  இதுதான் எந்த ஒரு துறைக்கும்  பொருத்தப்பாடுடைய உண்மையாகும்.  ஒட்டு மொத்த கார்ப்பரேட் துறைக்கும் இதுவே நடைமுறை பொருத்தப் பாடுடைய உண்மையாகும். 

வேலையின்மை அதிகரிக்கும் - கிராக்கி குறையும்

இந்த பின்புலத்தில் நாம் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், இப்படி தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தி கூலியை குறைப்பதன் காரணமாக லாப விகி தத்தை வேண்டுமானால் அதிகரிக்கலாம்.  ஆனால், ஒட்டு மொத்த பொருளாதாரத்தில் இந்த கூலிக் குறைப்பு கிராக்கி யின் அளவை குறைத்துவிடும்.  ஏனென்றால், சம்பளம் பெறும் ஒரு தொழிலாளி, தான் பெறும் சம்பளத்தின் ஒரு அல கினை செலவழித்து செய்யப்படும் நுகர்வு என்பது, ஒரு முதலாளி ஒரு தொழிலாளியின் கூலியை குறைப்பதின் வாயிலாக பெறும் லாபம், அந்தப் பணத்தைக் கொண்டு நுகரப்படும் ஒரு அலகு லாபத்தை விட குறைவாகும்.  இத னால், வேலைவாய்ப்பு குறையும்.   வேலையின்மை அதிக ரிக்கும். வேலையின்மையின் காரணமாக ஒட்டு மொத்த பொருளாதாரத்திலும் தாக்கம் ஏற்படும்.  ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் தொழிலாளர் நலச் சட்டங்களை ரத்து செய்வ தனால் அந்த குறிப்பிட்ட மாநிலத்தில் உற்பத்தியாகும் பொருட்களுக்கான கிராக்கி மட்டும் குறையப்போவதில்லை என்று ஒரு வேளை வாதிடப்படலாம்.  ஆனால், நிச்சயமாக, அந்த மாநிலத்தில் வேலைவாய்ப்பு இதன் மூலம் அதிகரிக் காது என்பதையும், வேலைவாய்ப்பு குறையத்தான் வாய்ப்புள் ளது என்பதையும் நாம் கவனிக்கத் தவறக்கூடாது. 

மூலதனம் எதிர்பார்ப்பது  இதை மட்டும் தானா?

உலகச் சந்தைக்காக பொருட்களை உற்பத்தி செய்யும் அந்நிய மூலதனத்தை சீனாவை விடுத்து இந்தியாவை நோக்கி  இழுப்பதன் மூலம் இதனை சரிக்கட்ட முடியுமா? இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், எங்கு புதிய நிறுவனத்தைத் துவங்கலாம் என்று அந்நிய மூல தனம் யோசிக்கும்போது அது கருத்தில் கொள்ளும் பல்வேறு அம்சங்களில் ஒன்று தான் ஊதியச் செலவு என்பது. தொழிலாளர்களின் தரம் என்பது மூலதனம் எதிர்பார்க்கும் மற்றொரு மிக முக்கியமான அம்சமாகும்.  தொழிலாளர்களின் தரம் என்பது அவர்கள் பெறும் கல்வி மற்றும் பயிற்சியைப் பொறுத்தும், அவர்களின் வேலை செய்யும் பணிச் சூழலை பொறுத்தும் தான் அமையும்.  கழிப்பறை வசதிகள் இன்றி, கேன்டீன் வசதிகள் இன்றி, மிக அற்பக் கூலிக்கு நீண்ட நேரம் உழைக்க வேண்டிய அவசி யம் நேரிடும் போது, நிச்சயமாக தொழிலாளர்கள் மகிழ்ச்சி யற்றவர்களாக, கோபம் நிறைந்தவர்களாக, திருப்தியற்ற வர்களாக, மனக் குமுறலுடன் பணியாற்ற வேண்டிய நிர்ப் பந்தத்திற்கு ஆளானவர்களாக இருப்பார்கள்.  இப்படிப்பட்ட தொழிலாளர் சக்தி எப்படி அந்நிய மூலதனத்தை சீனாவை விட இந்தியாவை நோக்கி இழுப்பதாக இருக்க முடியும் என்பது தான் நமது கேள்வி. 

உண்மைக்கு அப்பாற்பட்ட வாதம்

இவை அனைத்தும் ஒரு முக்கியமான உண்மையிலி ருந்து அப்பாற்பட்டதாக, அதனை கவனிக்கத் தவறியதாக உள்ளது.  உலகப் பொருளாதாரத்தை உற்று நோக்கினால், கொரோனா வைரஸ்  பெருந்தொற்றுக்கு முன்பே உலகப் பொருளாதாரம் மந்த நிலையில் தான் இருந்தது.  உலக அளவிலேயே கூட குறிப்பிடத்தக்க அளவிற்கு பெரிய முத லீடுகள் எதுவும் நிகழவில்லை. மேலும், நமது நாட்டில் தொழி லாளர் நலச் சட்டங்களை ரத்து செய்வதற்கு முன்னரே கூட, இந்திய தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்ட ஊதியம் என்பது சீனத் தொழிலாளர்களுடன் ஒப்பிடும்போது குறை வாகவே இருக்கிறது.  அப்படி மலிவான தொழிலாளர் சக்தி இந்தியாவில் கிடைத்த பிறகும் ஏன் அந்நிய மூலதனம் சீனாவை விட, பிற ஆசிய நாடுகளை விட இந்தியாவிற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்ற கேள்வி நம் முன்னே உள்ளது.  இன்னும் சொல்லப்போனால், கொரோனா வைரஸ் தொற்றுக்கு முன்பே, மோடி அரசாங்கம் கடல் கடந்து உலக நாடுகளெல்லாம் சென்று, ”மேக் இன் இந்தியா” திட்டம் குறித்து பிரச்சாரம் செய்து வந்த போதும், நமது உற்பத்தித் துறையின் வளர்ச்சி பூஜ்யமாகவோ அல்லது இன்னும் சில நேரங்களில் எதிர்மறையாகவோ தான் இருந்தது என்பது தானே உண்மை?  அப்போதே அவர்களுடைய மலிவு உழைப்பு சக்திக்கான பிரச்சாரங்களும் மேக் இன் இந்தி யாவிற்கான பிரச்சாரங்களும் பொய்யானவையென்றும் தவறானவையென்றும் நிரூபணம் ஆகிவிடவில்லையா?  அதன் பிறகு இது போன்ற பிரச்சாரங்களை அவர்கள் நிறுத்திவிட்டார்களே? 

ஒட்டுமொத்த சமுதாயத்தின்  மீதான தாக்குதல்

அந்நிய மூலதனத்திற்கு எது பொருந்துமோ அதே தான் இந்திய மூலதனத்திற்கும் பொருந்தும்.  மாநிலங்க ளில் தொழிலாளர் நலச் சட்டங்களை ரத்து செய்து தொழி லாளர்களின் உரிமைகளைப் பறித்தவுடன் இந்திய மூல தனம் ஒரு மாநிலம் விட்டு இன்னொரு மாநிலத்திற்கு வந்து விடாது.  அப்படி அது வரும் என்று கருதிக் கொண்டு ஒவ்வொரு மாநிலமும் போட்டி போட்டுக் கொண்டு  தங்கள் மாநிலத் திற்குள் தொழிலாளர் சந்தையை “மேலும் மேலும் மலி வாக்கும்” முயற்சியில் ஈடுபட்டால் அது மிகப் பெரும் ஆபத்தில் முடிந்துவிடும். 

மூலதன முதலீட்டை உயர்த்தாமல், ஊதிய வெட்டின் மூலம் லாபம் பெற முயல்வது என்பது நாம் ஏற்கனவே முன் வைத்த விவாதங்களில் இருந்து பார்க்கும்போது, ஒட்டு மொத்த கிராக்கியின் அளவைக் குறைத்துவிடும்,  உற் பத்தியை குறைத்துவிடும், வேலை வாய்ப்பை குறைத்து விடும்.  இதனால் ஒட்டு மொத்த லாபம் என்பதும் அதிகரிக் காது.  முதலீட்டின் அளவைப் பொறுத்தே லாபத்தின் அளவு இருக்கும்.  ஆனால் இந்த ஒட்டுமொத்த இலாப நிலைக்குள் ளேயே கூட, சிறு முதலாளிகள் மற்றும் குறு உற்பத்தியா ளர்களிடமிருந்து கிடைக்கும் இலாபங்களை கார்ப்பரேட் துறைக்கு மறுபகிர்வு செய்யும் முயற்சி நிச்சயம் நடக்கும்.  ஏனென்றால், தொழிலாளர் நலச் சட்டங்களை ரத்து செய்வ தன் காரணமாக தொழிலாளர்களின் ஊதியம் குறையும் போது, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு கிராக்கி என்பது குறைந்து போகும்.  இலாப விகிதம் உயர்வடை யாது.  எனவே, இப்படி தொழிலாளர் நலச் சட்டங்களை ரத்து செய்வது என்பது தொழிலாளர்கள் மீது மட்டும் நடத்தப் படும் தாக்குதல் அல்ல.  இது சிறு முதலாளிகள் மீதும் சிறு, குறு உற்பத்தியாளர்கள் மீதும் அவர்களுக்கே தெரியாமல் நடத்தப்படும் தாக்குதல் ஆகும்.  எனவே, தற்போது கார்ப்ப ரேட் துறையின் நலனுக்காக அரசு எடுக்கும் இந்த நடவ டிக்கை என்பது தொழிலாளர்களை, சிறு முதலாளிகளை, சிறு குறு உற்பத்தியாளர்களை காவு கொடுக்கும், கார்ப்ப ரேட் அல்லாத ஒட்டு மொத்த சமூகத்தையும் காவு கொடுக்கும் ஏற்பாடாகும். 

ஆனால், இது தான் மத்தியிலும் மாநிலங்களிலும் உள்ள பாஜக அரசுகளின் பொதுவான குணாம்சமாக உள்ளது. பொருளாதாரக் கோட்பாட்டுடன், தீவிர கார்ப்பரேட் மயம் மூலதனத்தையும், உற்பத்தியையும், வேலை வாய்ப்பை யும் அதிகரிக்கும் என்ற தவறான புரிதலுடன் இவர்கள் செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனால் ஏற்படப் போகும் பொருளாதார விளைவுகள் நமது நாட்டின் பொருளா தாரத்திற்கு பேரழிவினை தருவதாக அமைந்து விடும்.

பீப்பிள்ஸ் டெமாக்ரசி ( 17.5.2020) 
தமிழில்:  ஆர்.எஸ்.செண்பகம்


 

;