கட்டுரை

img

சாதித்த தேசங்களும் திணறும் தேசங்களும் - அ.அன்வர் உசேன்

கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் உலகில் உள்ள 167 தேசங்களுக்கு பரவியுள்ளது. மார்ச் 18 அதிகாலை 5 மணி வரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கும் அதே வேளையில் உயிர்ப்பலி வேகமாக 8000ஐ தொடும் நிலையில் உள்ளது. கடும் உயிர்ச் சேதத்தை சந்தித்த தேசங்களின் விவரம்: 19.03.2020 நிலவரப்படி 176 தேசங்களில் இந்த நோய்  பரவியுள்ளது. 2,19,246 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 8,968 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவ வசதிகள்  மறுக்கப்பட்ட ஏழைகள்

தொடக்கத்தில் இந்த வைரஸின் தாக்குதலை சீனா கடுமையாக எதிர்த்து போராடிக் கொண்டிருந்த பொழுது பலர் கவலையும் அனுதாபமும் தெரிவித்தாலும் சிலர் குரூர மாக ஏகடியம் பேசியும் ஏளனமும் செய்யத் தவறவில்லை. ஆனால் சீனா தனது அனைத்து வலிமையையும் வசதி களையும் பயன்படுத்தி இந்த கொடிய கிருமியை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. சீனா மட்டுமல்லாது தென் கொரியா/ ஜப்பான் போன்ற தேசங்களும் மிகத் திறமை யாக செயல்பட்டு வெற்றி கண்டுள்ளன.

மறுபுறத்தில் தம்மை மருத்துவ உலகின் முடிசூடா மன்னர்கள் என அழைத்துக் கொள்ளும் அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் போன்ற தேசங்கள் திண்டாடுகின்றன. உலகிலேயே சிறந்த மக்கள் நலத்திட்டங்கள் கொண்ட தேசங்களான நார்வே, சுவிட்சர்லாந்து,டென்மார்க் போன்ற தேசங்களும் திணறும் நிலை உருவாகியுள்ளது. இந்த தேசங்களின் மருத்துவ முன்னேற்றத்தை எவரும் மறுக்க முடியாது.  ஆனால் மருத்துவ வசதிகள் உழைப்பாளி மக்களுக்கு போய்ச் சேர வில்லை. எனவே புதிய வைரஸ் தனது தாக்குதலை தொடுத்த பொழுது சாதாரண மக்கள் மருத்துவப் பாதுகாப்பை பெற முடியாமல் போய்விட்டது. வசதி படைத்தவர்கள் தம்மை பாதுகாத்துக் கொண்டனர். ஏழைகள் கைவிடப்பட்டனர்.

ஒரு சிலர் சீனா மத விரோத தேசம் எனவும் எனவேதான் கடவுள் தண்டனை கொடுத்துவிட்டார் எனவும் குரூர மகிழ்ச்சி கொண்டனர். உய்கூர் பகுதியில் இஸ்லாமிய பயங்கரவாதத்தை களைய சீனா எடுத்த சில நடவடிக்கை களை காரணம் காட்டி அதனால்தான் சீனாவுக்கு தண்டனை கிடைத்தது என கூறியவர்களும் உண்டு. இவர்களின் வார்த்தைகள் காற்றில் கரைவதற்கு முன்பே ஷியா பிரிவின் ஈரானும் சன்னி பிரிவின் சவூதி அரேபியா, கத்தார், குவைத் போன்ற தேசங்களும் கொரோனா வைரஸிடம் சிக்கிக்கொண்டன. எண்ணெய் வளங்களின் பலன்கள் சாதாரண மக்களின் மருத்துவ நன்மைகளாக முழுமையாக மாறாத காரணத்தால் இந்த தேசங்களும் பாதிக்கப்பட்டன.

கோவிட்-19 எனும் இந்த தொற்று நோய் உலகம் முழுவதற்கும் உருவாகியுள்ள ஆபத்து. இது மதம்/இனம்/ பூகோளம் என அனைத்து வேறுபாடுகளையும் கடந்தது என்பதை அனைவரும் உணர்ந்து ஒருங்கிணைந்த நடவ டிக்கைகள் எடுத்தால் மட்டுமே தீர்வு காணமுடியும். கடந்த காலத்தில் எத்தனையோ நோய்களுக்கு மனித சக்தி தீர்வு கண்டுள்ளது. கொரோனாவும் வீழ்த்த முடியாத கிருமி அல்ல! 

சீனாவின் முன்மாதிரி

இந்த வைரஸின் தாக்குதலை மிக அதிகமாக சந்தித்த தேசம் சீனாதான்! சீன அரசாங்கமும் மக்களும் ஒன்றிணைந்து இந்த வைரஸை கட்டுப்படுத்தியுள்ளனர். ஆபத்து முழுமையாக நீங்கவில்லை என்பதையும் சீன அரசாங்கம் உணர்ந்துள்ளது. எனினும் எவரும் அறிந்தி ராத ஒரு பேரிடர் தாக்கினால் அதனை எப்படி சந்திக்க வேண்டும் என்பதை சீனா உலகுக்கு எடுத்து காட்டியுள்ளது எனில் மிகை அல்ல.  தொடக்கத்தில் சில குழப்பங்களும் தவறுகளும் நிகழ்ந்தாலும் அவற்றை சரி செய்து கொண்டு மின்னல் வேகத்தில் சீன அரசாங்கம் செயல்பட்டது. ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பை சார்ந்த டாக்டர் புரூஸ் அயில்வார்ட் சமீபத்தில் சீனாவில் இரண்டு வாரம் தங்கியிருந்து அங்கு எப்படி கொரோனா வைரஸ் மீது எதிர் தாக்குதல் தொடுக்கப்பட்டது என்பதை நேரில் கண்டார்.  அவர் கூறுகிறார்;

“சீனாவின் (வைரஸ் மீதான) எதிர் தாக்குதலை எவர் ஒருவரும் பின்பற்றலாம். ஆனால் அதற்கு அரசியல் தைரி யம், அதி வேகமாக செயல்படும் திறமை, நிதி வசதி, திட்ட மிடல், துல்லியமான மதிப்பீடு அடிப்படையில் சிந்தனைத் திறன் ஆகியவை தேவை” இந்த மகத்தான அணுகுமுறை மூலம்தான் சீனா வைரஸை கட்டுப்படுத்தியது. சுமார் 90 கோடி மக்கள் அரசாங்கத்தின் கட்டளையை ஏற்று வீடுகளுக்குள் முடங்கினர். தேசத்தின் மூலை முடுக்கில் இருந்த மருத்து வர்களில் 60%பேர் நோயின் மையப்பகுதியான வுஹான் பகுதிக்கு அனுப்பப்பட்டனர். மக்களின் உணவுத் தேவை உட்பட அனைத்தும் வீடுகளுக்கு வந்து சேர்ந்தன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஒருவர் கூட தமது வகுப்பை தவறவிடவில்லை. அனைத்து பாடங்களும் இணையம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆசிரியர்களும் மாண வர்களும் இணையம் மூலம் பேசிக்கொண்டனர். இதற்காக 5 ஜி தொழில்நுட்பத்தை அரசாங்கம் உடனடி யாக அமலாக்கியது.

இந்த நெருக்கடியை சரியாக கையாளாத பலர் , இரண்டு முக்கிய கட்சி செயலாளர்கள் உட்பட , பதவி நீக்கம் செய்யப்பட்டனர். கட்சி உறுப்பினர்கள் உடனடியாக களத்திலிறங்குவதை அனைத்து மட்ட தலைமைகளும் உத்தரவாதம் செய்தனர். சீன பிரதமரும் சீன ஜனாதிபதியும் பல இடங்களுக்கு நேரில் சென்று மக்களை சந்தித்தனர். மருத்துவ ஊழியர்களை உற்சாகப்படுத்தினர்.  மருத்துவ சேவையில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு பல மாகாணங்கள் சலுகைகளை அறிவித்தன. வுஹான் மட்டுமல்ல; அனைத்து பகுதிகளிலும் மருத்துவ சேவைகள் இலவச மாக அளிக்கப்பட்டன.

அதிநவீன தொழில் நுட்பங்களான டிரோன்களும் (ஆளில்லா குட்டி விமானங்கள்) ரோபோக்களும் பயன்படுத்தப்பட்டன. பிரம்மாண்டமான மருத்துவமனை கள் இரண்டு வாரங்களில் கட்டப்பட்டன; பத்தே நாட்களில் முகக் கவசம் தயாரிக்கும் புதிய ஆலைகள் உருவாக்கப் பட்டன. ஆங்கில மருந்துகள் மட்டுமின்றி சீனாவின் பாரம்பரிய மூலிகை மருந்துகளும் சோதிக்கப்பட்டன. நோயாளிகளுக்கு யோகா பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. இப்படி அனைத்துவித  சிகிச்சைகளும் ஒன்றுபட்ட செயல்க ளும்தான் வைரசுக்கு எதிரான தாக்குதலில் சீனாவின் வெற்றிக்கு முக்கியக் காரணம் ஆகும்.

சீனாவின் உதவியும் வைரசுக்கு எதிரான கியூபாவின் மருந்தும்

இவ்வளவு சோதனையான கால கட்டத்திலும் சீனா இன்னொரு பாதிப்பு நாடான இத்தாலிக்கு மருத்துவ உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளது. அதில் கீழ்கண்ட வரிகளையும் சீனா எழுதியிருந்தது;

“நாம்
ஒரே கடலின் அலைகள்
ஒரே மரத்தின் இலைகள்
ஒரே தோட்டத்தின் மலர்கள்”

இத்தகைய மனித நேயம் சோசலிச நாடுகளுக்குத்தான் சாத்தியம்.

தேசம் பாதிப்பு உயிரிழப்பு

முழுமையாக

குணம்

அடைந்தவர்கள்

நோய்

உள்ளவர்கள்

அபாய

 கட்டம்

பாதிக்கப்பட்டவர்

விகிதாச்சாரம்/10

    லட்சம் பேருக்கு
    

சீனா     80,894         3,237     69,614     69,614       2,622                  56
இத்தாலி     31,506        2,,503     2,941         26,062           2,060                  521
ஈரான்     16,169         988     5,389     9,792       -                   193
ஸ்பெயின்     11,826          533     5,389     10,265       563                    253 
ஜெர்மனி     9,367           26     67     9,274       2                  112
தென் கொரியா     8,413            84     1,540     6,789       59                  114
பிரான்ஸ்     7,730        175     602     6,953       699                  118
அமெரிக்கா     6,522         116     106     6,300        12                 20
இங்கிலாந்து     1,950           71     65     1,814        20                  29
இந்தியா     147         3     14     130        -                    0.1
             
மொத்தம் 167
தேசங்கள்    
    1,98,714     7,989     82,779     1,07,946   6,415                       25.5
 

கோவிட் 19 நோயால் பாதிக்கப்பட்ட மேற்கத்திய நாடு களின் மக்களை கொண்ட ஒரு கப்பலை பல தேசங்களும் ஏற்க மறுத்த பொழுது சோசலிச நாடான கியூபா கப்பலை வரவேற்றது மட்டுமல்ல; பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையும் அளித்தது எனும் செய்திகள் சமூக ஊட கங்களில் பரவின. ஆனால் வழக்கம் போல அச்சு ஊட கங்களும் காட்சி ஊடகங்களும் அதனை புறக்கணித்தன. 

கொரோனா வைரசை குணப்படுத்தும் இண்டர்ஃபெ ரான் எனும் ஒரு மருந்தை கியூபா கண்டுபிடித்துள்ளது. கியூபா இந்த மருந்தை சீனாவிற்கு அனுப்பியுள்ளது. இதன் மூலம் சுமார் 3500 பேர் உயிர் பிழைத்ததாக செய்திகள் கூறுகின்றன. இந்த மருந்து கியூபாவின் உயிரியல் தொழில்நுட்பம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது எனவும் இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதன் மூலம் வைரசை செயல் இழக்கச் செய்கிறது எனவும்  கியூப மருத்து வர்கள் கூறுகின்றனர். இந்த மருந்து தயாரிக்கும் வசதி கியூபாவில் இல்லாத காரணத்தால் சீனாவில் இது தயாரிக் கப்படுகிறது. சீன அரசாங்கம் அங்கீகரித்துள்ள 10 மருந்துகளில் இதுவும் ஒன்று. இந்த மருந்துகளை கியூபா தனது நட்பு நாடான வெனி சுலாவிற்கும் தந்துள்ளது. இதன் பயனாக 10,000க்கும் அதிகமானவர்கள் பலன் பெற்றுள்ளனர். மேலும் தனது கடுமையான நெருக்கடிக்கு இடையேயும் சீனா பல மருந்துக ளையும் பரிசோதனை கருவிகளையும் வெனிசுலாவிற்கு தந்து உதவியுள்ளது. கியூபாவிற்கும் சீனாவுக்கும் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ தனது நன்றியினை தெரிவித்துள்ளார்.

இந்திய நிலைமை

இந்தியாவில் இந்த வைரஸ் இதுவரை மிகக்குறைந்த பாதிப்பையே உருவாக்கியுள்ளது. மத்திய, மாநில அர சாங்கங்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரு கின்றன.  மக்களும் தமது நடமாட்டத்தை குறைத்துக் கொண்டதன் மூலம் ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர். எனினும் மிக அதிக அளவிலான விழிப்புணர்வும் தயார் நிலையும் தேவைப்படுகிறது.


இந்த வைரசிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள ஒரே  வழி, தாக்குதலுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் அனை வரும் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வதும் தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து மட்டங்களிலும் அமலாக்கு வதும்தான் என   உலக சுகாதார   அமைப்பு ஆணித்தர மாகக் கூறுகிறது. எனினும் இந்தியாவில் இதற்கான ஆய்வுக்கூடங்கள் மிகக் குறைவாக இருப்பதும் மருத்துவ பரிசோதனைகள் சொற்பமாக நடப்பதும் கவலைக்கு உரியதாக உள்ளது. உதாரணத்திற்கு மார்ச் 6ஆம் தேதி நிலவரப்படி பக்ரைனில் 10 லட்சம் பேருக்கு 6165 பேர் எனும் விகிதாச்சாரத்தில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். இது தென் கொரியாவில் 4831 எனவும் சீனாவில் 2820 எனவும் நார்வேயில் 1514 எனவும் உள்ளது. தைவானில் 637 எனவும் மலேசியாவில் 127 எனவும் வியட்நாமில் 48 எனவும் உள்ளது. ஆனால் இந்தியாவில் 10 இலட்சம் பேருக்கு வெறும் 3 பேர் எனும் விகிதத்தில்தான் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய அரசாங்கம் மக்களுக்கான மருத்துவத்துக்காக சராசரியாக வெறும் ரூபாய் 3 மட்டுமே செலவு செய்வதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. பல வளரும் தேசங்களை ஒப்பிடும் பொழுது மருத்துவ வசதிகள் இந்தியாவில் குறை வாகவே உள்ளன. இந்தச் சூழலில் கொரோனா வைரஸ் தாக்குதல் பரவலாக நடந்தால் கடும் உயிர்ச் சேதம் விளையும் ஆபத்து உள்ளது. எனவேதான் இந்திய அரசாங்கம் சீனா, தென் கொரியா போன்ற தேசங்களின் செயல்களிலிருந்து தகுந்த பாடங்களைப் பெற வேண்டும் என இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்துகின்றன. இதனை  அரசாங்கம் செய்யுமா என்பதை காலம் தான் காட்டும்.

 

 

 


 

;