கட்டுரை

img

கேள்வி கேட்கும் உரிமை இனி இந்தியர்களுக்கு இல்லையா?

சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்ட திருத்த மசோதா 2019, (யுஏபிஏ) தேசிய புலனாய்வு முகமை திருத்த மசோதா 2019 ஆகிய சட்டங்களில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் ஜனநாயக உரிமைகளை ஒடுக்குவதாக உள்ளன. விசாரணையின்றி எந்தவொரு தனிநபரையும் தீவிரவாதியாக பிரகடனப்படுத்த அரசுக்கு அதிகாரம் அளிக்கின்றன இந்த புதிய திருத்தங்கள். 

யுஏபிஏ சட்டத்திருத்தமும் பாஜக அரசின் விளக்கமும்

அரசுத் துரோக / தேசத்துரோக குற்றச்சாட்டை வரையறுக்கும் இ.த.ச.பிரிவு 124ஏ-ன் கீழான வழக்கின் கேதர்நாத் சிங்  (எதிர்) பீகார் அரசு- தீர்ப்பு ரையில் உச்சநீதிமன்றம், “மக்கள் நலனுக்கெதி ரான அரசின் கொள்கை முடிவுகள் மற்றும் அத்த கைய முடிவுகளை செயல்படுத்தக் கருதும் அர சினை விமர்சித்துப் பேசும் கடுஞ்சொற்கள் யாரு டைய எலும்புகளையும் உடைப்பதில்லை. எனவே, அரசாங்கத்தின் மக்கள் விரோதத் திட்டங்களை கண்டிப்பதாலேயே ஒருவர் அரசுத் துரோக குற்றம் புரிந்ததாக கருதக்கூடாது” என 1962ல் தீர்ப்பு வழங்கியது. ஆனால், கடந்த ஜூலை மாதம் 24ஆம் தேதி நாடாளுமன்றத்தில் இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா யுஏபிஏ திருத்தச் சட்ட மசோதாவினை தாக்கல் செய்துவிட்டு, “இளைஞர்களின் மனதில் தீவிரவாத சிந்தனைகளை விதைக்கும் முயற்சி யில் யாரேனும் ஈடுபடுகிறார்கள் என்று அரசு கருது மாயின் அவர்கள் பயங்கரவாதியாக அறிவிக்கப் பட்டு தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்” என விளக்கம் அளித்துள்ளார். அதேசமயம் எதுவெல் லாம் பயங்கரவாதக் கருத்துக்கள் மற்றும் பயங்க ரவாதப் பிரச்சாரம் என சட்டத்தில் விளக்கம் இல்லை என்பதுதான் பேராபத்து.

தீவிரவாதக் குழுக்கள் மற்றும் பயங்கரவாத செயல்பாடுகளுக்கெதிராக  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், எந்தவித விசாரணையு மின்றி ஒரு நபரை தீவிரவாதி என்று அறிவித்து அவரின் பெயரை 4வது அட்டவணையில் சேர்த்து  பயங்கரவாதி என அரசாங்கத்தால் பிரகடனப்படுத்த முடியும் என்றால், எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பதுதான் கேள்வி. “சட்டத்தினால் நிலைநாட்டப்பட்ட நடைமுறை யாலன்றி எவருடைய தனிநபர் சுதந்திரத்தையும் இழக்கச் செய்ய முடியாது” என இந்திய அரசியல மைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமையான உறுப்பு-21 கூறுகிறது. ஆனால் எந்த சட்ட நடை முறையையும் பின்பற்றாமல் யாரை வேண்டு மானாலும் தீவிரவாதி என அரசு நினைத்தால் முத்திரை குத்த முடியும் என இந்தச் சட்டத்திருத்தத் தின் மூலம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஒருவேளை ஒருவரை அரசு தீவிரவாதி என அறி வித்தால் இயல்பாகவே அவர் பணிபுரியும் இடத்திலி ருந்து நீக்கப்படுவார். சமூக புறக்கணிப்பு நிகழும். தேவையற்ற விமர்சனம் மற்றும் காரணமின்றி எதிர்ப்புக்குள்ளாக்கப்படுவார். குறிப்பாக, இதுவரை சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் புழக்கத்திற்குள்ளான ‘தேசத் துரோகிகள் நகர்ப்புற நக்சல்கள்’ என்ற சொல்லாடல் மேற்கண்ட சட்டத்திருத்த மசோதா விவாதத்தின் போது உள்துறை அமைச்சர்  அமித்ஷாவால் சொல் லப்பட்டு அது அவைக்குறிப்பில் இடம்பெற்றுள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்புச்) சட்டம் 1967,  பகுதி 4, பிரிவு 15ன் கீழ் தீவிரவாத செயல் (Terrorist Act) என்றால், சக்திவாய்ந்த வெடி பொருள் மற்றும் தீப்பற்றக்கூடிய பொருட்களைக் கொண்டு இந்திய ஒற்றுமை, ஒருமைப்பாடு,  பாது காப்பு அல்லது இறையாண்மைக்கு ஊறு விளை விக்கும் எண்ணத்துடன் செய்யப்படும் செயல். இறப்பு (அ) காயம் ஏற்படுத்துதல்; இறப்பு மற்றும் சொத்து அழிப்பு செய்தல்; மேலும் மக்களுக்கு பயன் படும் அத்தியாவசிய வாழ்க்கையின் சேவைகளு க்கு ஊறு விளைவித்தல் உள்ளிட்ட இன்னும் சில செய்கைகள் தீவிரவாதச் செயல் என வரையறுக்கப் பட்டுள்ளது. அத்தகைய செயலுக்குரிய தண்டனை கள் குறித்து  பிரிவு-16 விளக்குகிறது. மேற்கண்ட பிரிவு 16 மற்றும் 17 ஆகியவை கடந்த 1.2.2013 முதல் சட்டத்திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டு ஏற்கெனவே அமலில் உள்ளது.

இச்சட்டத்தின் பகுதி-6, பிரிவு 35, தீவிரவாதக் குழுக்கள் (Terrorism Organization) பற்றி வரை யறுக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் பகுதி-2, பிரிவு 3ஆனது அரசு திருப்தி கொள்ளுமாயின் எந்த அமைப்பையும் சட்ட விரோதமான அமைப்பு என்று அறிவிக்க அதிகாரம் ஏற்படுத்தி உள்ளது. சட்டவிரோத அமைப்பு என்று  அறிவித்த 30 நாட்களுக்குள் மத்தியஅரசு, தீர்ப்பாயம் அமைத்து அதை விசாரித்து, அறிவிப்பு செய்து, அதன் தன்மை குறித்து உத்தரவிடவேண்டுமென பிரிவு 4 கூறு கிறது. பிரிவு 5, தீர்ப்பாயம் அமைக்க வேண்டுமென வலியுறுத்துகிறது. பிரிவு 7, சட்டவிரோத அமைப்பு என அறிவிக்கப்பட்ட குழு, நிதியை பயன்படுத்து வதில் தடை உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் வழங்கி யுள்ளது. 1967ஆம் ஆண்டு இயற்றப்பட்ட யுஏபிஏ சட்டம்-2008 மற்றும் 2013ல் ஏற்படுத்திய திருத்தங்கள் மூலம் ஏற்கெனவே வலுப்படுத்தப்பட்டுள்ளது. அதில் உள்ள விதிகளின்படியே கூட கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஆனால் இப்போது, சிந்தித்து செயல்பட நினைக்கும் கருத்தி யல்வாதிகளை அரசு நினைத்தால் தீவிரவாதிக ளாக அறிவிக்கலாம் என்ற சட்டத் திருத்தம் வந்தி ருப்பது  அரசாங்கத்திற்கு எதிரான நியாயமான ஜன நாயகப் போராட்டம் நடத்தும் போராளிகள், மலைவாழ் மக்களின் உரிமைகளைப் பேசும் சமூக நல ஆர்வ லர்கள் மற்றும் ராணுவ அத்துமீறல்கள் குறித்து பேசும் மனித உரிமை ஆர்வலர்களைக் கூட ‘தீவிர வாதி’ என முத்திரை குத்தவே பயன்படும். பாஜக அரசு அதைச் செய்யும்.

உச்சநீதிமன்ற தீர்ப்புகள்

ஒருவரின் பேச்சு, சிந்தனை, நேரடியான விளைவுகளை ஏற்படுத்தி அதன் மூலம் பொது ஒழுங்கு சீர்குலையுமானால் அரசத் துரோக குற்றச்சாட்டு வரையறைக்குள் வரும். இல்லையெ னில் வராது என ஏற்கெனவே உச்சநீதிமன்றம், பல்வந்த் சிங் (எதிர்) பஞ்சாப் அரசு வழக்கில் தீர்ப்ப ளித்துள்ளது. மேலும் அருண் புஃயான் (எதிர்) அசாம் அரசு என்ற வழக்கில் உச்சநீதிமன்றம், அமெரிக்கத் தீர்ப்பான  (Branden Burg Vs State Of  Ohio) வழக்கை மேற்கோள்காட்டி, உடனடி சட்டவிரோத நடவடிக்கை யை தூண்டினால் மட்டுமே வன்முறையை ஆத ரிப்பதாகும் என கூறியுள்ளது. அண்மையில், கேரள அரசு (எதிர்) ரனிஃப் என்ற வழக்கில், சட்டவிரோத இயக்கத்தில் பங்கேற்று ஆனால் செயல்படாத ஒருவரை, அவர் வெறுமனே சட்டத்தால் தடை செய்யப்பட்ட இயக்கத்தை சார்ந்த வர் என்பதாலேயே தண்டனைக்குள்ளாக்க முடியாது என கூறி, அவ்வாறு கைது செய்யப்பட்ட நபருக்கு 10 லட்சம் ரூபாயை இழப்பீடு வழங்க கூறிய ஒரு நீதிபதி உத்தரவினை இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு உறுதி செய்து தீர்ப்பு வழங்கி யுள்ளது. இந்த வழக்கு புனிதப் போர் என்று சொல்லப்படுகிற ஜிகாத் - தொடர்பாக கருத்துக்கள் அடங்கிய நூல்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் தொடுக்கப்பட்ட  வழக்காகும்.

மனித உரிமை ஆர்வலர் டாக்டர் பினாயக்சென், யுஏபிஏ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் மாவோயிஸ்ட் பிரச்சார நூல்கள் வைத்திருந்த காரணத்தினாலேயே  குற்றவாளி யென கூறிவிட முடியாதென விளக்கி பிணையம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மத்தியப்பிரதேச அரசு (எதிர்) ராம் சங்கர் ராகவன்சி வழக்கில், ஒரு ஆசிரியர் ஆர்எஸ்எஸ் மற்றும் ஜனசங்க பிரசார் அமைப்பில் உறுப்பி னராக இருந்தார் என்கிற காரணத்திற்காக பணி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவுக்கெதிரான வழக்கில், 1983ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதி சின்னப்ப ரெட்டி, அரசியல் மற்றும் தத்துவார்த்த சிந்தனை கொண்டவராக ஒரு அரசு ஊழியர் இருந்தார் என்கிற காரணத்தினாலேயே பணி நீக்கம் செய்யக்கூடாது என கூறி பணி நீக்க உத்தரவு செல்லாது என தீப்பு ரையில் பதிவு செய்தார். ‘அரசன் தவறிழைக்க மாட்டான்’ (-King Can Do No Wrong) - என்பது ஆங்கில அரசமைப்புச்சட்டம்.

‘அரசன் தவறிழைத்தாலும் கேள்வி கேட்கும் உரிமை இந்திய குடிமக்களுக்கு உண்டு’ என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம். எனவே, மக்களின் உரிமைகளுக்காக நியாய மாகப் போராடும் ஜனநாயக போர்க்குரலை அடக்குமுறைச் சட்டத்தால் ஒடுக்க நினைக்கும் பாஜக அரசின் முடிவை மக்கள் கேள்விக்குள்ளாக்கு வார்கள். அதுவே இந்தியாவின் வரலாறு.

தேசிய புலனாய்வு முகமை திருத்த மசோதா 2019

மும்பை நட்சத்திர விடுதி தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து 2009ம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ ) ஏற்படுத்தப்பட்டது. அதில் தற்போது 3 முக்கிய திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஏற்கெனவே சட்டவிரோத நட வடிக்கைகள் தடுப்பு குற்றங்கள் -1967 (யுஏபிஏ) மற்றும் அணு சக்தி சட்டம் - 1962 (Atomic Energy Act -1962) ஆகிய சட்டங்களின் கீழ் வகைப் படுத்தப்பட்டுள்ள குற்றங்களை விசாரிக்கும் புலன் விசாரணை அமைப்பாக இருந்த என்ஐஏவு-க்கு, பின்வரும் குற்றங்களையும் விசாரிக்க அதிகாரம் வாங்கப்பட்டுள்ளன.

மனித கடத்தல் பற்றிய குற்றங்கள் (Human Trafficking)
 

கள்ள நாணயம் தொடர்பான குற்றங்கள் (Counterfidt Currency)
 

இணைய பயங்கரவாத குற்றங்கள் (Cyber Terrorism)
 

தடை செய்யப்பட்ட பொருட்களின் உற்பத்தி, விற்பனை (Manufacture of sale of Prohibition Hams)
 

வெடிமருந்து பொருட்கள் சட்டம் (Offence under the Explosive Substances Act-1908)

இந்திய நிலப் பரப்பினைத் தாண்டி அயல் நாடு களில் இந்தியர் எவரேனும் குற்றம் புரிந்தாலும் இந்திய ஆள்வரைக்குள் குற்றம் நிகழ்ந்ததாகவே கருதப்பட்டு நடவடிக்கை தொடரும். மேலும், தேசிய புலனாய்வு முகமையானது, மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு  பதிலாக, அந்த வழக்குகளை உடனடியாக விசாரித்து தீர்ப்பு வழங்க  சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும். யுஏபிஏ சட்டத்தின் கீழ் நிகழ்த்தப்படும் குற்றங்க ளை விசாரிக்க என்ஐஏ-வுக்கு அதிகாரம் கொடுக் கப்பட்டுள்ளதால் தற்போது அந்தச் சட்டத்தில் ஏற் படுத்தப்பட்ட சட்டத்திருத்தங்களின் குற்ற வகைகளை யும் விசாரிக்க என்ஐஏ-வுக்கு அதிகாரம் உண்டு.  எனவே, தனிநபர் எந்த மாநிலத்தை சார்ந்த வராக இருப்பினும், அந்த மாநில புலானாய்வு அமைப்பின் நேரடி அனுமதியில்லாமலேயே என்ஐஏ விசாரிக்க அதிகாரம் உண்டு. இது தனிநபர் சுதந்திர பறிப்பு மட்டுமல்ல; இந்திய அரசியல மைப்புச் சட்டம் வழங்கியுள்ள கூட்டாட்சித் தத்து வத்தின் அடிப்படையையே மீறுகிற செயலாகும்.

 

;