கட்டுரை

img

காஷ்மீரின் குரல்…

கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா கொண்டு வந்த மசோதா 370 மற்றும் 35A சட்டப்பிரிவு இனிமேல் ஜம்மு - காஷ்மீரில்  இருந்து தளர்த்தப்படுகிறது என்றார். அதுமட்டுமின்றி ஜம்மு - காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் இன்னொரு யூனியன் பிரதேசமாகவும்  அதிகாரப்பூர்வமாக செயல்படும்  என்று அறிவிக்கப்பட்டது. 

இது நாடு முழுவதும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி யது ஜம்மு - காஷ்மீரில் கொண்டுவரப்பட்ட இந்த மசோதா வுக்கு எதிராக ஜம்மு மக்கள் நிச்சயம் வீதிக்கு வந்து போராடு வார்கள் என்று மத்திய அரசாங்கத்திற்கு தெரியும். அப்படி யான எந்த போராட்டமும் நடைபெறக் கூடாது என்று ஜம்மு - காஷ்மீர் முழுவதும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பிறகு அந்தக் கட்டுப்பாடுகள் இனிமேல் இல்லை என்று அறி வித்தனர். ஆனால் உண்மையில் அங்கு வாழ்கின்ற மக்க ளின்  வாழ்வுரிமைக்கு எதிரான மிகப்பெரிய மனித உரிமை மீறல் நடைபெற்றுவருகிறது.  இது சம்பந்தமாக இந்தியா விலுள்ள பெரும்பாலான ஊடகங்கள் வாய் திறக்காத நிலை யில் இணைய ஊடகமான நியூஸ்கிளிக் களத்தில் சென்று அந்த மக்களின் மீது நடந்த மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வந்துள்ளது. 

கீழே கொடுக்கப்பட்டுள்ள   சம்பவங்கள் வெவ்வேறு கால கட்டத்தில் கடந்த மூன்று மாதத்தில் நடைபெற்றது.

22,செப்-2019 
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பட்காம் ( Budgam)  மாவட்டத்திற்கு செய்தியாளர் குழு சென்றது.  இந்த மாவட்டம் இந்திய ராணுவத்தின் மூலம் பாதுகாக்கப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது.  அங்கு வசித்து வரும் ஜெயனவை  சந்தித்தோம்  அவருக்கு 49 வயது.  அவர் சொன்னது. 

நாங்க எல்லாரும் தூங்கிக்கொண்டு இருந்தோம் அப்போ  என்  முகத்தில் ஒரு வெளிச்சம்   அடித்தது.  இரவு 12 மணி   இருக்கும்  உடனே முழிச்சு  பார்த்தேன் வீட்டை சுத்தி யாரோ நடமாடுவது போல   உணர்ந்தேன்.  உடனே அலறியடித்து  வீட்டில் படுத்திருந்த எல்லாரையும் எழுப்பினேன். அப்போ  இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் உங்க வீட்டுக்காரர்ரை  வெளிய வர  சொல்லுங்கள் என்று சொன்னார். என்னுடைய வீட்டுக்காரர் வெளியே  வந்தவுடனே அவரை வேகமா இழுத்துட்டு போனாங்க நானும் பின்னாடியே போனேன்.   ஒரு கட்டத்துல என்னை தடுத்து நிறுத்தினார்கள்.  

என் வீட்டுக்காரரிடம் சரமாரியாக கேள்வி  கேட்டார்கள், எங்க வீட்டிலிருந்த என்னுடைய மகன்களையும் எழுப்பி னேன். அவர்கள் வேகமா  வந்தார்கள். எனக்கு  மொத்தம் 2  மகன்கள் சபீர் மற்றும்  மன்சூர் அவர்கள்   வந்தவுடன் அவர்கள் மூலம் எங்க வீட்டுக்கு  அருகே உள்ள  மற்ற வீடுகளை சோதனை செய்தனர்.  சோதனை செய்த எந்த வீட்டிலும் இளைஞர்கள் இல்லை. வேகமாக கீழே வந்தார்கள்  என்னுடைய இரு மகன்களையும் அவர்கள் கொண்டுவந்த இன்னொரு வண்டியில ஏற்றினார் கள். கதறி அழுதேன் நாங்கள் என்ன  செய்தோம் என்று கேட்டேன், என் மகன்களை ஏற்றிய வண்டியை  நோக்கி போனேன் ஆனால் என்னை போக விடவில்லை அவர்கள் வைத்திருந்த துப்பாக்கி  மூலம்  என்னை  மிரட்டினாங்கள் என்னால ஒண்ணுமே செய்ய முடியவில்லை.

பிறகு என் மகன்களை அருகே உள்ள போலீஸ் ஸ்டே ஷன்ல  லாக்கப்பில் வைத்திருப்பதாக தகவல் சொன்னார்கள். என் மகன்கள் இருந்த போலீஸ் ஸ்டேஷன் போயிருந்தேன்.  போலீசார்  என்னுடைய ரெண்டு மகன்களையும்  கடுமையா அடித்து  இருந்தது என்று தெரிந்தது ஆனால் ஏன்  அடித்தார் என்று  தெரியவில்லை,  என் மகன்களை எப்போ வெளியே விடுவார்கள் என்று கேட்டேன் அதுக்கு எந்த பதிலும்  சொல்ல வில்லை.  இப்போது வரை காத்துகிட்டு இருக்கேன் என்   மகன்களுக்காக...

3,ஆக்- 2019

ஸ்ரீ நகரை நோக்கி செய்தியாளர் குழு சென்றுகொண்டி ருந்த போது, நடுவில் கூட்டமாக  பெண்கள் சிலர்  காஷ்மீர் போலீசுக்கு எதிராக கோஷம் போட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள்  அருகே சென்றோம்  ஏன்   கோஷம் போட்டுக்  கொண்டிருக்கிறீர்கள் என்று ஒரு பெண்ணை சந்தித்து   பேசி னோம் அவர் சொன்னது.  இந்தப் போராட்டத்தை  காஷ்மீர் போலீசுக்கு எதிராக  நாங்கள் நடத்தி வருகின்றோம்.  போலீஸ் எங்கள் குழந்தைகளை  அழைத்துச்  சென்றுள்ளனர் என்றார். அதற்கான காரணம் என்ன என்று  கேட்டபோது அவர் கூறியது.

எங்கள் வீடு இங்கு அருகேதான் உள்ளது.  இதோ இப்போ தான் நமாஸ் முடிச்சுட்டு எங்கள் வீட்டுக்கு  குழந்தைகள் வந்தார்கள்.   வீட்டுக்கு வந்த  என் குழந்தைங்கள் டீ  குடித்து விட்டு  கீழ போய்  விளையாடிட்டு  வருகின்றோம் என்று  சென்றார் கள்.  அப்பொழுது  எங்கள்  பகுதிக்கு வந்த காஷ்மீர் போலீஸ் என்னுடைய  ரெண்டு  குழந்தைகளையும்  அழைத்து சென்றார். என்னோட குழந்தைகள் மட்டுமில்லை இங்க நிறைய குழந்தைகளை  அழைத்து சென்றனர்.   என்னுடைய முதல் பையனுக்கு13  வயசு இரண்டாவது பையனுக்கு 12 வயசுதான் ஆகுது.  எங்கள் கண்ணு முன்னாடியே குழந்தைகளை ரொம்ப முரட்டுத்தனமா   நடத்தினார்கள். நான் நேரடியாக போய்  அவர்களிடம் என் குழந்தையை  விடுங்கள் என்று சொன்னேன், என் குழந்தைகள் ஒண்ணுமே  செய்யவில்லை  என்றேன்.  போலீசார்  எதையும் காதுல  வாங்கவில்லை.

அரசாங்கம் ஏன்  இப்படி ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறது என்று  தெரியவில்லை. கடந்த மூணு   மாசமாக குழந்தைங்கள் இருக்கின்ற வீட்டை பூட்டு   போட்டுவிட்டுப் போய்விடுவார்கள். வீட்டுக்குள்ளேயேதான் நாங்கள்  இருந்தோம். எங்களால் ஒண்ணும்  செய்ய  முடியவில்லை. இங்க  இருக்கிற சிஆர்பிஎஃப், ராணுவ படை,  மற்றும் போலீஸ் மூணு பேருக்கும்  எந்த வித்யாசம் இல்லை. ஒரே மாதிரி தான் நடந்துக்கிறாங்கள் ரொம்ப மோசமாக. எல்லாரும் கூட்டு சேர்ந்து   தினமும் ஏதாவது  காரணம் சொல்லி  வீட்ல  இருக் கின்ற எல்லா ஆண்களையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்கின்றனர்.

எங்க குழந்தைங்கள் கல்லை தூக்கி  எறிந்தார்கள் என்று சொல்கின்றனர்.  ஆனால்   அப்படியான எந்த செயலிலும்  எங்க குழந்தைங்க யாருமே ஈடுபடவில்லை.  செய்யாத  ஒன்றை  செய்ததாக எங்க குழந்தைகள்  மீது  பழி  போடுகின்றனர்.  அப்படி என்றால் நிச்சயமா நாங்க கல்லெறிய வேண்டிய சூழல்தான் உருவாகும்  என்று  தோன்றுகிறது.  இது இப்படியே தொடர்ந்தால் எங்களுக்கு வேற எந்த  வழியும் இல்லை.  எங்க ளை பாதுகாக்கணும் எங்கள் குழந்தைகளை படிக்க  அனுப்ப வேண்டும். குறிப்பா மாலை அல்லது இரவு நேரங்களில்தான்  அவர்கள்  வருகின்றனர் வீட்ல  இருக்கும் பெண்களையும்  அடிக் கின்றனர்.  

நியூஸ்கிள்க் செய்தியாளர் குழு  பாதிக்கப்பட்ட மக்களை  அழைத்துக்கொண்டு அந்த குழந்தைகளை வைத்து இருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றது. போலீஸ் ஸ்டேஷனில் நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் குழந்தைகளை உடனடியாக விடுதலை செய்தனர். விடுதலை செய்த குழந்தை களிடம் நடந்தவற்றை கேட்டோம் அவர்கள் கூறியது.

நாங்கள் விளையாடிக் கொண்டிருந்தோம்.திடீர்னு போலீஸ் ஜிப்ஸி மற்றும் ஒரு வேனில்  வந்தது.   வந்த உடனே  பயந்து  வீட்டுக்குப் போக  கிளம்பினோம். ஆனால் அந்த  வேனிலிருந்து வந்த  போலீசார் அவர்கள்  வைத்திருந்த துப்பாக்கியை காட்டி எங்களை மிரட்டினார்.  நீங்கள்தான் கல்லை  தூக்கி  எரிந்தது என்றார்கள்,  நாங்கள்  அதை மறுத்தோம் பிறகு  நீங்க எங்களோடு  வரவேண்டும் என்று   கட்டாயப்படுத்தினார்கள்.   

எங்களை போல்  பத்து பேரு அந்த வேனில்  இருந்தார் கள்.  எங்க எல்லாரையும் கடைசியில் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்  சென்றனர்.  பிறகு போலீஸ் ஸ்டேஷனில் ஒரு வீடியோ போட்டு அந்த வீடியோவில்   நாங்கள் யாராவது  இருக்கின்றோமா என்று  பார்த்தனர்.  அப்படி யாராவது வந்தால் அவர்களை  லாக்கப்பில் போடுன்னும் என்று  ஒரு போலீசார் சொன்னார். ஒரு முறைக்கு பலமுறை அந்த வீடியோவை  பார்த்தனர் நாங்க யாருமே அந்த வீடியோல  வர வில்லை.  எங்கள போல் பலர் அந்த  போலீஸ் ஸ்டேஷன் லாக்கப்பில்  இருந்தனர். அவர்களை நாங்கள் பார்த்தோம். எல்லாருக்கும் எங்கள் வயசுதான் இருக்கும். அவர்கள் இருந்த  லாக்கப்பில் குடிக்க தண்ணி, லைட்  போன்ற எந்த வசதியும் இல்லாமல்  அழுது கொண்டே இருந்தனர்.

15 ஆகஸ்ட் 2019  
 

போலீசாரால் கைது செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட11 வயது உடைய ஒரு மாணவன் அளித்த பேட்டி.
எங்களுக்கு சுதந்திரம் வேண்டும் 

சுதந்திரம் என்றால்  என்னவென்று தெரியுமா?

சுதந்திரம் என்றால்  தாங்கள் வாழ்கின்ற  இந்த இடத்தில் துப்பாக்கி ஏந்திய  போலீசார்  இல்லாததுதான்.    அன்றைக்கு மார்க்கெட்டுக்குப்  ரொட்டி வாங்க போனேன் அப்போது தெருவுல கல்களை தூக்கி எறிஞ்சிட்டு  இருந்தனர்.  அதை பார்த்து பயந்து வீட்டுக்கு போக ஓடிப் போனேன்.  திடீரென ஒருவர் வழிமறித்து என்ன பிடித்து வேகமா ஒரு வாகனத்தில் ஏற்றினார். காவல் நிலையத்துக்கு கொண்டு  சென்றனர்.  

காவல்நிலையத்துக்கு போன உடனே என்னை  தடியால் பயங்கரமா அடித்தனர். அவர்கள்   அடித்ததில் என்னுடைய பல் உடைந்தது. நான்  கேட்டேன்  நான் என்ன   செய்தேன் என்னை ஏன் அடிக்கிறீர்கள் அடிக்காதீங்க நா மார்க்கெட்டுக்கு ரொட்டி வாங்க வந்தேன்   என்றேன்.  எதையும் கேட்கவில்லை தொடர்ந்து  அடித்தார்கள். அது ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி போலீஸ் ஸ்டேஷன் லாக்கப்பில்தான்  இருந்தேன்.  என்ன மாதிரி ஒரு 16 பேரும் என் கூட  இருந்தனர் நாங்கள்  இருந்த லாக்கப்பில் லைட் இல்ல,   இருட்டில்தான்  அந்த 15 நாளும் இருந்தோம்.  குடிக்க தண்ணீர் கூட எங்க  வீட்டில் இருந்தவர் கள்தான் கொண்டு வந்தனர்.   அந்தப் பதினைந்து நாட்க ளுக்குப் பிறகு  என்னை விட்டு விட்டனர். ஆனால் தினமும் வந்து சைன் போடணும்னு சொன்னார்கள்.  எங்களுக்கு சுதந்திர வேண்டும் என்றான் அவன்...

 தமிழில் : ஆ.லட்சுமி காந்த் பாரதி

;