கட்டுரை

img

கலாச்சார போராட்டத்தையும் முன்னெடுப்போம்!

அரசியல் போராட்டத்தோடு கலாச் சார போராட்டத்தையும் முன் ்னெடுப்போம் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெலுங்கானா மாநிலச் செயலாளர் டி.வீரபத்ரம் கூறினார்.

மாநாட்டில் அவர் பேசுகையில்,மொழி தான் மக்களை ஒருங்கிணைக்கிறது. ஒருவர் எவ்வித இடையூறும் இல்லாமல்  ஐந்து நிமிடம் சிந்திக்கவேண்டும். ஆனால் எந்த ஒரு மொழியும் அல்லாமல் சிந்திக்க வேண்டும். இந்த சவாலை ஏற்கத் தயாரா? யாரும் இந்தச் சவாலை ஏற்கமுடியாது. அதுதான் மொழியின் சக்தி. மனிதன் சிந்திக்க வேண்டுமென்றால் ஏதாவது ஒரு மொழி அவசியம். மொழி இல்லையென்றால் சிந்தனை நின்றுவிடும். மனிதன் சிந்திக்கா மல் இருந்திருந்தால் இந்த உலகமே உரு வாகியிருக்காது.அதுதான் மொழியின் பலம்.  நமது அறிவை பெருக்கிக்கொள்ள வேண்டும் என்றால் மொழி அவசியம்.அதுவும் தாய்மொழியில் சிந்தித்தால் தான் அறிவு வேகமாக வளரும். புத்தரைப்போல் போதி மரத்தடியில் உட்கார்ந்தால் ஞானம் வந்துவிடாது. திருப்பதி  வெங்கடேச பெரு மாளுக்கு காணிக்கை செலுத்தினால் அறிவு வராது. ஞானம் வரவேண்டும் என்றால் சமு தாயத்துடன் உரையாடவேண்டும். நம்மைச் சுற்றியுள்ள மக்களோடு உரையாட வேண்டும், அதற்கு மொழி தேவை. அது தான் தாய் மொழி. 

மனித சமூகம் உருவாகும்போது சைகை யில் பேசிக்கொண்டார்கள். அது வளர்ந்து வளர்ந்து மொழியாக மாறியது. இப்போது பல்வேறு மொழிகள் உலகில் உள்ளன. ஏராளமான மொழிகள் உலகில் இருந்தா லும் குறிப்பிடத்தக்க மொழிகள் தான் ஆட்சி மொழியாக உள்ளன. தாய் மொழியில் கல்வி அளித்தால் தான் குழந்தைகளின் அறி வுத்திறன் வேகமாக வளரும். அவர்கள் ஒன்றை எளிதாக புரிந்து கொள்ளமுடியும். எனவே தான் அனைத்து மாநில மொழி களுக்கும் சமஅந்தஸ்து வழங்க வேண்டும்; தேசிய மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் நாம் குரல் கொடுத்து வருகிறோம்.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வருகிறது. எனவே ஆட்சி மாறிவிடும். எனவே மக்களிடம் மத ரீதியாக உணர்வுகளை தூண்டிவிட்டால் அவர்களை ஒரே கலாச்சாரத்தின் கீழ் திரட்ட முடியும் என்று பாஜக கருதுகிறது. அப்போது நாம் விரும்பியதை அமல்படுத்தமுடியும் என்று அக்கட்சி கருதுகிறது. எனவேதான் மதம் என்ற ஒரு விஷயத்தை மட்டும் அது கையிலெடுத்து செயல்பட்டு வருகிறது. இத்தா லியில் முசோலினியும் ஜெர்மனியில் இட்ல ரும் இதைத்தான் செய்தார்கள். இந்தியாவில் தங்களது மறைமுக செயல்திட்டங்களை செயல்படுத்த பல்வேறுபட்ட கலாச்சாரம், பண்பாடு,  மொழி, இனம் ஆகியவை அவர்க ளுக்கு தடையாக உள்ளது. எனவேதான் மக்களை ஒன்றுபடுத்த இந்தித் திணிப்பை தீவிரமாக அமல்படுத்த முயற்சிக்கிறார்கள். இதன் மூலம் ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே மதம் என்ற திட்டத்தை எளிதாக அமல் படுத்த முடியும் என்று கருதுகிறார்கள்.எனவே நாம் அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல் கலாச்சார ரீதியாகவும் மத்திய ஆட்சியாளர்க ளுக்கு எதிராகப் போராட முன்வரவேண்டும்.

கம்யூனிஸ்ட்டுகளுக்கு சர்வதேச பார்வை இருப்பதால் தான் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மொழிவாரி மாநிலங்கள் அமைக் கப்பட்டபோது மதராஸ் ஆந்திராவுடன் இணைக்கப்படவேண்டும் என்று குரல் எழுந்தபோது மதராஸ் தமிழகத்தில் தான் இருக்கவேண்டும் என்று தைரியமாக சொன்னவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். அதே போல் ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட போது ஐதராபாத் நகரம் யாருக்கும் சொந்த மாக்காமல் யூனியன் பிரதேசமாக்க முயற் சித்தனர். ஆனால் ஐதராபாத் தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரமாகத்தான் இருக்கவேண்டும் என்று சொன்னவர்களும் கம்யூனிஸ்ட்டுகள் தான்.

எனவே மொழிவிஷயத்தில் நமக்கு தெளி வான பார்வை உண்டு.எனவே பாஜக ஆட்சிக்கு எதிராக  அரசியல் போராட்டத்தோடு கலாச்சார போராட்டத்தையும் முன்னெடுப்போம்.  இவ்வாறு வீரபத்ரம் பேசினார்.

;