கட்டுரை

img

‘இந்தித் திணிப்பை கண்டிக்காத ஒரே முதல்வர்’

சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி பேசுகையில், திரு வள்ளுவரை இன்று அமித்ஷா வாக மாற்ற பாஜக முயற்சி செய்கிறது. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப் பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” தொழில் வேற்றுமைதான், மனிதருக்குள் இருக்கும் வேற்றுமை. பிறப்பிலே எல்லா உயிர்களும் சமம் என்ற கம்யூனிஸ்ட் கட்சி யின் சித்தாந்தத்தை 2 ஆயிரம் ஆண்டுக ளுக்கு முன்பே வெளிப்படுத்தியிருக்கிறார் வள்ளுவர். ஆனால் மனிதனாக பிறந்த வர்களை இஸ்லாம், கிறித்துவர், இந்து என்று பிரித்துக் கூறுவதும், அதிலேயும் இந்துக்கள்தான் உயர்ந்தவர்கள் என்றும் இந்துத்துவா சக்திகள் கூறுகின்றன. அனை வரையும் சமமாகப் பார்க்கும் கொள்கை மத்திய பாஜகவிடம் உள்ளதா? எனவே இந்துத் துவா கொள்கைக்கும் வள்ளுவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் கூறிய ஆதி பகவன் முதற்றே உலகு என்ற ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு வள்ளுவரை பாஜகவின் பொதுச் செயலாளராக மாற்றும் அவர்களின் கீழ்த்தரமான அரசியலை முறியடிக்க வேண்டும் என்றார்.

பெரியாரை மட்டுமல்ல திருவள்ளுவ ரையும் பாதுகாக்க வேண்டிய நிலை ஏற் பட்டுள்ளது. செப்டம்பர் 18ஆம் தேதியை இந்தி தினம் என கடைப்பிடித்தார்கள். சர்வ தேச அளவில் இந்தியாவை அடையாளப் படுத்த ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும். இந்தி மொழிதான் இந்தியாவை ஒன்றுபடுத்தும் என அமித்ஷா கூறுகிறார். மத்திய ஆட்சியில் உள்துறை அமைச்சராக பதவியேற்ற பிறகு 10 நாட்களில் பல கோப்பு கள் வந்தன. ஆனால் ஒரு கோப்பு கூட இந்தி யில் வரவில்லை. நான் கூறிய பிறகுதான் 60 விழுக்காடு கோப்புகள் இந்தியில் வர ஆரம்பித்துள்ளன என தில்லியில் நடை பெற்ற நிகழ்ச்சியில் கூறுகிறார். மேலும் வட கிழக்கு மாநிலங்களில் தனியார் ஆசிரி யர்கள் மூலம் மாணவர்களுக்கு இந்தியை கற்றுக் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்து வரு கிறோம் என்றும் கூறுகிறார். 2024ஆம் ஆண்டு இந்தி மொழி பெரும் உச்சத்தை அடைந்து விடும் என்றும் அவர் கூறுகிறார்.

அதுமட்டுமல்லாமல் நீதித்துறை, வங்கி, மருத்துவம், மருத்துவ அறிவியல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இந்தி மொழியின் பயன்பாடு அதிகரிக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறுகிறார். இதை எதிர்த்து தமிழகத்தில் முழு அடைப்பு நடத்தப்படும் என்று அறி வித்த பிறகு, அமித்ஷா கூறுகிறார் நானே இந்தி பேசாத மாநிலத்தில் இருந்துதான் வந்திருக்கிறேன் என்று. ஒரு கூட்டத்தில் பகிரங்கமாக அறிவித்த ஒன்றை மறுநாளே இல்லை என்று மாற்றி பேசுகிறார்கள் என்றால் இதைவிட கேவலம் வேறு ஒன்றுமில்லை. அமித்ஷா இந்தி குறித்து கூறிய கருத்தெல்லாம் ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் அஜெண்டாவில் உள்ளது. ஆகவேதான் அதை அமல்படுத்த அவர்கள் துணிந்திருக்கிறார்கள். 

உள்நாட்டில் நெடுஞ்சாலைகளில் இருக்கின்ற கற்களில் ஆங்கிலத்தை அழித்து விட்டு இந்தியில் எழுத ஆரம்பித் துள்ளனர். நெடுஞ்சாலைத் துறை, வங்கி,  ஏடிஎம் ஆகியவற்றில் இருந்து தமிழை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வரு கிறார்கள். தொலைக்காட்சி விளம்பரங்களி லும் இந்தி வரத் தொடங்கி விட்டது. இப்படி எல்லாவகையிலும் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது பாஜக அரசு.

உழைப்பாளி மக்களின் மிகப்பெரிய கருவி ஒலிதான். அந்த ஒலி மூலம்தான் மொழி உருவாகிறது. உழைப்போடு வளர்ந்தது உற்பத்தி மட்டுமல்ல மொழியும் தான். மொழி என்பது மனிதனின் பரிணாம வளர்ச்சி. எனது தாய் மொழியில் நான் சிந்திப்பதை, எழுதுவதை எப்படி அரசு மறுக்க முடியும் என கேள்வி எழுப்பினார். எனவேதான் இந்தித் திணிப்பை மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வரலாற்று வழி நெடுகிலும் எதிர்த்து வந்துள்ளது என்றார்.

அனைத்து மாநில மொழிகளையும் பாதுகாக்க வேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடு. பல மாநி லங்களில் அந்தந்த மாநில இளைஞர்க ளுக்கும், பெண்களுக்கும் 90 விழுக்காடு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என சட்டம் இயற்றியிருக்கி றார்கள். ஆனால் தமிழக முதல்வர் தமிழ் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என சட்டத்தை தளர்த்தியிருக்கிறார். அமித் ஷா இந்தி குறித்து பேசிய போது அனைத்து மாநில முதல்வர்களும் கண்டனம் தெரி வித்தனர். கண்டனம் தெரிவிக்காத ஒரே முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் என்றார்.

தொகுப்பு : அ.விஜயகுமார், எஸ்.ராமச்சந்திரன்

;