கட்டுரை

img

இந்தித் திணிப்புக்கு எதிராக தேசிய அளவில் போராட்டம்

சிபிஎம் கர்நாடக மாநில செயற்குழு உறுப்பினர் சுரேந்திரராவ் பேசுகையில், மோடி அரசு மிகவும் ஆபத்தான பாதையில் சென்று கொண்டி ருக்கக்கூடிய இவ்வேளையில் தாய்மொழியை பாதுகாக்க சிபிஎம் தமிழ்நாடு மாநிலக்குழு எடுத்துள்ள இந்த முன்முயற்சி பாராட்டத்தக்கது.தமிழ், கன்னட மொழிகளுக்கு 3 ஆயிரம் ஆண்டு வரலாறு, பாரம்பரியம் உண்டு. மாநில மொழிகளை வளர்க்க நிதி ஒதுக்காமல் இந்தி மொழியை திணிக்க மத்திய பாஜக அரசு தீவிரமாக செயல்படுவதில் ஒரு அரசியல் இருக்கிறது. கலாச்சார  தேசியம் என்ற பெயரில் இந்தி, இந்து, இந்து தேசம் என மாற்றப்பார்க்கிறார்கள்.

இந்தி மட்டும் ஒரே மொழியாக இருந்தால் தான் ஒரே தேசம், ஒரு மொழி, ஒருமதம் என்ற சிந்தனையை செயல்படுத்த முடியும் என்று பாஜகவினர் கருதுகிறார்கள். இந்தித் திணிப்பு க்கு கர்நாடகமும் விதிவிலக்கல்ல. கர்நாடகாவில் உள்ள பொ துத்துறை வங்கிகளில் இந்தி மொழி மாநிலங்களை சேர்ந்த வர்கள் அதிகளவில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.அங்கு செல்லும் விவசாயிகளை வங்கி அதிகாரிகள் ஊழியர்கள் இந்தியில் பேசாவிட்டால் வெளியே போ என்கிறார்கள். தாய் மொழி உணர்வு அதிகமாக உள்ள கர்நாடகாவிலேயே இந்த நிலை என்றால் மற்ற மாநிலங்களில் என்ன நிலை என்று சொல்லவேண்டியதில்லை. அவர்கள் வாடிக்கையாளர்கள் தங்களது தாய் மொழியான கன்னடத்தில் பேசமுடியவில்லை. இத்தகைய மோசமான நிலையை பாஜக அரசு உருவாக்கி யுள்ளது. 

இன்று இந்தி,அல்லது ஆங்கிலத்தில் கடிதப் போக்கு வரத்து இருக்கவேண்டும் என்று மத்திய அரசு கூறுகிறது. இந்தித் திணிப்பை எதிர்த்து தென்னிந்திய அளவில் நடை பெறும் இந்த மாநாட்டை தேசிய அளவில் இந்தி அல்லாத மாநிலங்களை இணைத்து நாம் நடத்த வேண்டும். 

;