என்ன சொல்லியிருக்காங்க

img

சுட்டெரிக்கும் வெயிலில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டுகோள்

சென்னை, மே 23- சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங் களில் வெயில் சுட்டெரிக்கும். எனவே  அடுத்த 2 தினங்களுக்கு காலை 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்தவெளியில் வேலை செய் வதை தவிர்க்க வேண்டும் என்று அறி வுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து  சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் சென்னை, திரு வள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற் றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்க ளில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ்  முதல் 42 டிகிரி செல்சி யஸ் வரை (107 டிகிரி பாரன்ஹீட்) பதி வாகக் கூடும். எனவே, அடுத்து வரும் 2 தினங்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்த வெளியில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். தென்மேற்கு அரபிக்கடல் பகுதி களில் பலத்த காற்று மணிக்கு 45 கிமீ முதல் 55 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அடுத்த 5 நாட்க ளுக்கு இப்பகுதிக்கு செல்ல வேண் டாம். 

6 பகுதிகளில்  100 டிகிரி வெயில் 

சமீபத்தில் வங்காளதேசம் நோக்கி பயணித்த ஆம்பன் புயலால், தமி ழகத்தில் கடும் வெப்பநிலை நிலவி யது.  இதனால் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தின் 6 இடங்களில் இரண்டாவது நாளாக சனிக்கிழமையன்று வெயில் 100 டிகிரி யை கடந்து பதிவாகியுள்ளது.  இதன்படி, திருத்தணியில் 110.84 டிகிரி, வேலூர்- 108.32 டிகிரி, மீனம் பாக்கம்- 106.16 டிகிரி, ஈரோடு- 104.72 டிகிரி, திருப்பூர்- 104.36 டிகிரி மற்றும் காஞ்சிபுரம்- 104.36 டிகிரி என வெப்ப நிலை பதிவாகியுள்ளது.

;