என்ன சொல்லியிருக்காங்க

img

அரசு தொலைக்காட்சியில் ராமாயண தொடர்: வீரமணி கண்டனம்

[7:36 PM, 3/28/2020] +91 94449 80698: அரசு தொலைக்காட்சியில் ராமாயண தொடர்

கொரோனாவை எதிர்த்து ஒட்டுமொத்த இந்தியாவே அரசுக்குச் சார்பாகக் குரல் கொடுக்கும் ஒரு காலகட்டத் தில் அரசு தொலைக்காட்சி யில் ராமாயண தொடர் ஒளிபரப்பும் மத்திய அரசின் இந்த மதவாதப் போக்கைக் கைவிடவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கொரோனாவைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர வும், முற்றிலுமாக ஒழித்துக் கட்டவும் மத்திய - மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு கட்சிகளுக்கும், மதங்களுக் கும் அப்பாற்பட்ட முறையில் பொதுமக்கள், தலைவர்கள் ஆதரவுக் கரம் நீட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில், மத்திய அரசு - அரசுத் தொலைக் காட்சியில் ராமாயணத்தை மீண்டும் ஒளிபரப்புவது தேவையற்ற ஒன்று. மத்திய அரசின் இந்து மதக் கண்ணோட்ட இத்தகைய நடவடிக்கைகள்மீது கடும் விமர்சனங்கள் வெடித்து எழும் ஒரு நிலையை ஏற்படுத்துவது நல்லதல்ல.

அரசு என்பது மதச்சார்பற்ற கொள்கையைக் கொண்டது. இந்த நிலையில், குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த ஒரு இதிகாசத்தை அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது சட்டப்படியும் குற்றமேயாகும்.
சந்தேகப்பட்ட மனைவி சீதையை, ராமன் நெருப்பில் இறங்கச் சொன்னதும், கருவுற்ற சீதையை கர்ப்பிணியான நிலையில், காட்டுக்கு அனுப்பியதும், பெண்ணினம் ஏற்கக்கூடிய பாலின நீதியா? இவற்றை அரசு தொலைக் காட்சிகளிலே நியாயப்படுத்தி வெளியிடலாமா?

எல்லோரும் ஒன்றிணைந்து கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நிலையில், அதனைச் சிதற அடிக்கும் வகையில், மக்கள் வேறு பக்கம் நின்று அரசை எதிர்க்கும் நிலையை உருவாக்குவது  மத்திய அரசுக்கு நல்லதல்ல! இதற்கான முழு பொறுப்பை மத்திய பாஜக அரசே ஏற்கவேண்டி வரும் என்பதைத் [7:36 PM, 3/28/2020] +91 94449 80698: என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் வீரமணி தெரிவித்திருக்கிறார்
 

;