என்ன சொல்லியிருக்காங்க

img

ப.சிதம்பரம் உதவியாளரிடம் சிபிஐ விசாரணை

புதுதில்லி,செப்.11- ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்னாள் உதவியாளர் பெருமாளிடம் சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது. இந்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கடந்த 21-ஆம் தேதியன்று கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.  இந்நிலையில்,  ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்னாள் உதவியாளர் பெருமாளிடம் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளதாகவும், தில்லியில் உள்ள அவரது வீட்டில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

;