என்ன சொல்லியிருக்காங்க

img

அக். 31- வரை அவகாசம் வேண்டும் உள்ளாட்சித் தேர்தல் இப்போதைக்கு இல்லை!

புதுதில்லி, ஜூலை 15 - தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு, தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் அக்டோ பர் 31-ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் கேட்டுள்ளது. தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவ தற்கு உத்தரவிட வேண்டும் என்று  உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு  தொடர்ந்திருந்தது. உச்ச நீதிமன்றமும், இந்த வழக்கை விசாரித்து, 3 மாதத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், அந்த காலக்கெடுவிற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாத தமிழக தேர்தல் தேர்தல் ஆணையம், கூடுதல் அவகாசம் கேட்டது. வாக்காளர் பட்டியலை முழுமை யாக தயார் செய்யும் நடைமுறை முடிந்த பிறகே உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியும் என்பதாலும், நாடாளு மன்றத் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்ததால் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த முடிய வில்லை என்றும் கூறியிருந்தது.

உச்சநீதிமன்றமும் அதனை ஏற்றுக் கொண்டது. அதேபோல மக்களவைத் தேர்தல் முடிந்ததும், உள்ளாட்சி தேர்தலுக்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியது. முதற்கட்டமாக, வாக்காளர் பட்டியல் தயாரிப்புக்கான வழிமுறை வெளியிடப்பட்டது. வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் பிரிக்கும் பணியும் நடைபெற்றது. இதனிடையே, திமுக தொடர்ந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் திங்களன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்தமுறை தேர்தல் குறித்து உறுதியான தகவல் வெளியாகும் என்று பலரும் எதிர்பார்த்தனர்.  ஆனால், தற்போதைக்கு தங்களால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாது என்றும் அக்டோபர் 31-ம் தேதி வரை தங்களுக்கு அவகாசம்  வழங்க வேண்டும் என்றும் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்து, தமிழக தேர்தல் ஆணையம் பின்வாங்கி யுள்ளது.

;