என்ன சொல்லியிருக்காங்க

விண்கல்

விண்கல்...?
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு,  ஒருவர் விண்கல் என்று கூறி ஓர் கல்லை எடுத்து வந்தார். மேலும் அவர் இஸ்ரோ, நாசா மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கும், உயர்கல்வி மாணவர்களுக்கும் உதவும் என்று  நம்புகிறேன் என்றும் இதனால் ஏதாவது பலன் கிடைத்தால் நான் மிகவும் சந்தோசப்படு வேன் என்றும் கூறியுள்ளார்.

 **************
78 லட்சம் மோசடி
ராமேஸ்வரம் கோயில் ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி ரூ.78 லட்சம்  மோசடி செய்யப்பட்டதாக கணிப்பொறி தற்காலிகப் பணியாளர்மீது காவல் துறையிடம் கோயில் இணை ஆணையர் புகார் தெரிவித்துள்ளார். திருக்கோயில் ஊழியர்களின் சேம நலநிதி பணம் கையாடல் செய்யப்பட்ட சம்பவம், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

**************
அடுத்த மலை...
வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் 4,000 வீடுகளைக் கட்ட தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் முடிவு செய்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மலைப் பகுதியின் அடிவாரத்தில் வீடுகளைக் கட்ட தமிழக அரசு முடிவு எடுத்திருப்பது இயற்கைக்குத் துரோகம் விளைவிக்கும் செயல் என வனவிலங்கு ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

**************
தமிழக இளைஞர்
ஜெர்மனியில், ஒயிட்ஹால் மீடியா என்ற அமைப்பு 5-வது முறையாக ஸ்டீஜ்ன்பெர்கர் பிராங்பேர்ட்ல் டேட்டா அனலிடிக்ஸ் கான்பரன்ஸை நடத்தியது. ஜெர்மனியின் மிகப்பெரிய நிறுவனங்களின் சிஇஓ, சிஓஓ-க்கள் பார்வையாளர்களாய் அமர்ந்திருக்க, அந்த கூட்டத்தில் டேட்டா அனலிடிக்ஸ் பற்றி பேசியுள்ளார் தமிழகத்தை சேர்ந்த விஜய் பிரவின் மகராஜன்.

**************
79வது இடத்தில்
உலகளவில் சைக்கிளின் பயன்பாடு எந்த நிலையில் உள்ளது என்று கோயா குளோபல் பைசைக்கிள் சிட்டிஸ் இன்டெக்ஸ் 2019 வெளியிட்டுள்ளத் தகவலின்படி, அதிகமாகச் சைக்கிள் பயன்படுத்தும் நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது யுட்ரிச்ட் (நெதர்லாந்து), ஜெர்மனி நாட்டின் முன்ஸ்டர் 2வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் தில்லி 79-வது இடத்தில் உள்ளது.

;