என்ன சொல்லியிருக்காங்க

img

மதுரையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்தார்

தமிழகத்தில் முதல் பலி - அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

மதுரை, மார்ச் 25- மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா விற்கு முதல் பலி ஏற்பட்டுள்ளது . மதுரை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 54 வயதான நபருக்கு, திங்க ளன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர் நோய் பாதிப் புள்ள நாடுகளுக்கோ, மாநிலங்க ளுக்கோ செல்லாதவர். இருப்பினும் இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற் பட்டது மருத்துவ பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டு, இரண்டு தினங்க ளாக தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்தார்.  இந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பதை புதனன்று அதி காலை சுமார் 2 மணியளவில் தமிழக அரசு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் அறிவித்தார்.

பாதிக்கப்பட்டவருக்கு ஏற்கனவே சி.ஓ.பி.டி. (நாள்பட்ட நுரையீரல் நோய்), சர்க்கரை வியாதி உள்ளிட்ட பாதிப்பு கள் இருந்து வந்த நிலையில், செவ்வாய் இரவு முதல் நிலைமை கவலைக்கிட மாகி இருப்பதாக சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலை யில், சிகிச்சை பலனின்றி உயிரிழந் தார். 

மேலும் அவருடன் தொடர்பில் இருந் தவர்களை கொரோனா பாதித்திருக்கும் வாய்ப்புள்ளதால், இது பற்றிய விசா ரணையில் சுகாதாரத்துறை, வருவாய்த் துறை, மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். பக்கத்து வீட் டில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று வந் துள்ளார் என்ற தகவலைத் தொடர்ந்து அங்கு அவருடன் தொடர்பில் இருந்த அத்தனை பேரும் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அருகில் உள்ள வீடுகள் சுகாதாரத்துறை கண்காணிப் பில் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு அடையாள ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. மரணமடைந்தவரின் மனைவி, மகனும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ரத்த, தொண்டைச்சளி மாதிரி எடுத்து கொரோனா தொற்று நோய் பரிசோதனை செய்ய சுகாதா ரத்துறை முடிவு செய்துள்ளது. அவர்கள் வசிக்கும் தெருப்பகுதி, மசூதி, இதர பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப் பட்டது.

சமீபத்தில் தாய்லாந்தில் இருந்து வந்த 8 பேர் மதுரையில் உள்ள பல்வேறு மசூதிகளுக்கு சென்று வழிபாடு நடத்தி னர். அவர்கள் தற்போது பாதிக்கப்பட்டு மரணமடைந்தவர் வழக்கமாக செல்லும் பள்ளிவாசலுக்கும் சென்றனர். பாதிக்கப் பட்டவர் தான் அவர்களை கவனித்த தாக கூறப்படுகிறது. எனவே அந்த 8 பேரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்திருக்கக் கூடும் என்றும், அவரி டம் இருந்தே பரவியிருக்கக் கூடும் என்றும் சுகாதாரத்துறையினர் சந்தே கிக்கின்றனர். இதனால் 8 பேரும் சென்ற விளாம்பட்டி, மீனாம்பாள்புரம், எஸ்.எஸ்.காலனி உள்ளிட்ட மசூதிகளில் செவ்வாயன்று கிருமி நாசினி தெளிக்கப் பட்டது. 8 பேரும் சந்தித்த மசூதி நிர்வாகி கள் விவரத்தை மாநகராட்சி ஊழி யர்கள் சேகரித்தனர். அவர்களை வீட்டுத் தனிமையில் வைக்க ஏற்பாடு நடக்கி றது. அதேபோல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மரணமடைந்த மேற்படி நோயாளியுடன் உதவிக்கு இருந்த செவிலியருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறைபாடுகள் 

மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் பணியாற்றும் ஊழியர்கள் கூறுகையில், இந்த நோய் தொற்று சம்பந்தமாக போதிய விழிப்புணர்வை மருத்துவத் துறை நிர்வாகம் ஊழி யர்களுக்கு ஏற்படுத்தவில்லை. சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை வைத்து மட்டுமே எங்களுடைய பாது காப்பை உறுதிப்படுத்தி வருகிறோம். போதிய உபகரணங்கள் இல்லாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, தென்மாவட்ட மக்கள் அனைவருமே வந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் கொரோனா நோய் தொற்றுக்கான சிறப்பு பிரிவை துரிதப்படுத்தி செயல் படுத்த வேண்டும். மேலும் இந்த வார் டினை மருத்துவமனைக்கு அருகில் உள்ள வேறு இடத்திற்கு மாற்றி அப்பகு திக்கு மக்கள் செல்லாத அளவிற்கு பாது காப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்ற னர்.

மாநகராட்சி தூய்மைப் பணியாளர் கள் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணி செய்து வருகின்றனர். மக் களை பாதுகாக்க பணியாற்றும் மக்கள் நலப் பணியாளர்களுக்கு உரிய பாது காப்பு உபகரணங்களை மாநகராட்சி நிர்வாகம் வழங்கிட வேண்டும் என்றும் மக்கள் நல பணியாளர்கள் கூறுகின்ற னர்.

மத்திய - மாநில அரசுகள் தொடர்ந்து ஏப்ரல் 14 ஆம் தேதி வரை மக்கள் வீடு களை விட்டு வெளியே வரவேண்டாம் என்று ஊரடங்கு உத்தரவு செவ்வா யன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தி யுள்ள நிலையில், பலரும் தங்களு டைய பாதுகாப்பை உணராமல் உள்ளார் கள். கூட்டமாக நின்று பேசுவது, ஒரே இடத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டி ருப்பது என்று மதுரை நகரில் பல்வேறு பகுதிகளிலும் காண முடிந்தது. அவர்களையும் காவல்துறையினர் பாது காப்பு கருதி அரசுக்கு நீங்கள் ஒத்து ழைக்க வேண்டும் என்று கூறி அனுப்பி வைக்கின்றார்கள். ஆனால் உள் தெருக் களில் கூடும் நபர்களை கண்காணிப்ப தில் காவல்துறைக்கு சிரமம் ஏற்பட்டுள் ளது.

அதேபோல் மருந்துக் கடைகள் செயல்படலாம் என்று அரசு கூறி உள்ள நிலையில் அவற்றையும் அடைக்க சொல்லி காவல்துறையினர் மதுரை நகர் பகுதிகளில் நிர்ப்பந்தித்து வருகிறார் கள்.

                    (ந.நி)
 

;