என்ன சொல்லியிருக்காங்க

img

காலத்தை வென்றவர்கள் - ஒரு இத்தாலிய மெய்யியலாளர் ஜியார்டானோ புரூனோ

“இந்த உலகம் உருண்டையானது; பூமி சுற்றுவதால்தான் இரவு பகல் ஏற்படுகிறது; சூரியன்தான் சூரிய மண்ட லத்தின் மையம்; சூரியனை மையமாக வைத்தே பூமி சுழன்று கொண்டிருக்கிறது; விண்வெளியில் இரவில் தெரியும் விண்மீன் களைப் போன்றே சூரியனும் ஒரு விண்மீன். எல்லா விண்மீன் களுக்கும், பூமி போல கோள்கள் உண்டு. இந்த பிரபஞ்சம் எல்லையற்றது” என்ற பல வகையான வானவியல் கருத்துக்களை உலகத்தின் கண் முன்னே முதன் முதலில் பகிர்ந்த விஞ்ஞானி ஜியார்டானோ புரூனோ. அதற்காக அவருக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு 1600ல் ரோம் நகர் கிறித்தவ மதச்சபை அவரை உயிருடன் எரித்துக் கொன்றது. அவரின் அர்ப்பணிப்பு என்பது அறிவியல் உலகில் மகத்தானது. இறையியல் கொள்கைக்கும், இயற்கை தத்துவாதி களுக்கும், துளிர்விட்ட சுதந்திர தாகத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் வெடித்த தீமூட்டல் இது என நவீன அறிவியல் முன்னோடிகளால் கணிக்கப்படுகிறது.

பெரணமல்லூர் சேகரன்

;