என்ன சொல்லியிருக்காங்க

img

உயர்மின்கோபுர பணியை தொடர்ந்தால் ஆட்சியரகம் முன்பு போராட்டம்

திருப்பூர் மாவட்ட விவசாயிகள் எச்சரிக்கை

திருப்பூர், மே 22- கொரோனா ஊரடங்கு உத்த ரவு அமலில் இருப்பதைப் பயன்ப டுத்திக் கொண்டு திருப்பூர் மாவட்டத்தில் உயர்மின் கோபுரப் பணிகளைத் தொடர்ந்தால் விவ சாயிகளைத் திரட்டிப் போராட்டம்  நடத்தப் போவதாக தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் கூறியுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மது சூதனன் தலைமையில் நடை பெற்றது. மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் உள்ளிட்ட நிர்வாகி கள் பங்கேற்றனர்.

ஊரடங்கு காலத்தில் பாதிக்  கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு  வழங்க வேண்டும். விவசாயி களுக்கு, விவசாய தொழிலாளர்க ளுக்கும் கொரோனா நிதி உதவி  வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகளின் அகில இந்திய  ஒருங்கிணைப்பு குழு அறை கூவல்படி வருகிற மே 27ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் உடு மலை, தாராபுரம், ஊத்துக்குளி, மடத்துக்குளம், அவிநாசி ஆகிய  மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக் கப்பட்டது. விவசாயிகளின் விளை நிலங்களை பாதிக்கும் உயர் மின் கோபுர பணிகள், கொரோனா காலத்தில் விதிகளை புறக்க ணித்து, திருப்பூர் மாவட்டத்தில் வேகமாக நடைபெறுகிறது.  சேதாரமாகும் பயிர்களுக்கு உரிய   இழப்பீடு, பாதிக்கப் படும் நிலங்க ளுக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு ஆகியவற்றை கோவை மாவட்ட ஆட்சியர் கணக்கிட்டு வழங்கிய வழிமுறையில் திருப்பூர் மாவட் டத்திலும் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடந்த ஆறு மாதமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர்.

இதன் விளைவாக, கடந்த மார்ச் முதல் வாரத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் அளித்த உறுதிமொழிக்கு  மாறாக  ஊர டங்கை பயன்படுத்தி விவசாயிக ளுக்கு இழப்பீடு வழங்காமல் வேலை செய்ய பவர்கிரிட் நிர்வா கத்திற்கு அனுமதி அளித்து, அதற்கு காவல்துறை பாதுகாப் பும் வழங்கி வருகிறது, மாவட்ட நிர்வாகம். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உரிய இழப்பீடு கிடைக்கா மல், வாழ்வாதாரம் இழந்து விவ சாயிகள் தவித்து வருகின்றனர். சமீபத்தில் காங்கேயத்தில் ஒரு  விவசாயி தற்கொலை செய்து கொண்டார். தாராபுரம் வட்டத்தில்  ஒரு விவசாயி குடும்பத்துடன் இழப்பீடு கேட்டு போராடிய போது  200-க்கும் மேற்பட்ட காவல்துறை யினரை வைத்து அப்புறப்படுத்தி அவரது நிலத்தில் வேலை செய்து வருகிறார்கள்.

விவசாயிகள் எழுப்பும்  நியாயமான கோரிக்கை களைக்கூட மாவட்ட நிர்வாகம்  பரிசீலிக்க தயாரில்லாமல் தான டித்த மூப்பாக செயல்படுகிறது.  ஆகவே, உயர் மின் கோபுர திட்டத்தால் நிலமதிப்பு, வாழ்வா தாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளோடு மாவட்ட நிர்வாகம் முறையாக பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். அத்துடன் ஊரடங்கு காலத்தில் வேலை செய்வதை நிறுத்த வேண்டும். விவசாய நிலத்திற்குள்  காவல்துறையை அனுப்பி அச்சுறுத்துவதை கைவிட வேண்டும். ஏற்கனவே திருப்பூர்  ஆட்சியர் உறுதியளித்தபடி சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்நிலை தொடருமானால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  போராட்டம் நடத்துவது எனவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

;