உலகம்

img

அண்டார்டிகாவில் முதன் முறையாக 20 டிகிரி வெப்பம்

அண்டார்டிகா, பிப்.15- அண்டார்டிகா பனிக் கண்டத்தின் வெப்பநிலை 20.75 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்ததை விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர். அந்தப் பகுதியின் வெப்ப நிலை 20 டிகிரி யைத் தாண்டியது இதுவே முதல் முறை என்று அவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து செய்மூர் தீவிலுள்ள வானிலைக் கண்காணிப்பு மையத்தில் பணியாற்றி வரும் பிரேசில் விஞ்ஞானி கார்லோஸ் ஷயேஃபர் கூறுகையில், ‘தற்போது பதிவு செய்யப்பட்ட 20.75 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மிகக் குறுகிய காலத்தியதே ஆகும். இதன் மூலம் அண்டார்டி காவின் வெப்பநிலை உயர்ந்துவிட்டதாகக் கூற முடியாது.  எனினும், பருவநிலை மாற்றத்தின் அபாயப் போக்கை இந்த உயர்ந்தபட்ச வெப்பநிலை உணர்த்துகிறது’ என்றார்.

;