உலகம்

img

ஜி 7 உச்சி மாநாடு... டிரம்ப் அழைப்பை நிராகரித்த ஜெர்மனி பிரதமர்...  

வாஷிங்டன்
அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளடக்கிய குரூப் ஆப் 7 என்ற பெயரில் ஒரு அமைப்பை கொண்டுள்ளது. இந்த அமைப்பில் ஐரோப்பிய யூனியனின் தலைவருக்கும் அந்தஸ்து உள்ள நிலையில், கொரோனா மற்றும் ஊரடங்கை சமாளிக்க ஜுன் மாத இறுதியில் வாஷிங்டனில் ஜி-7 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளதாக அமெரிக்கா அறிவித்தது. 

மேலும் இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலுக்கு தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்தார். 

இந்நிலையில், டிரம்ப் என்னை அழைத்ததற்கு நன்றி. ஆனால் கொரோனா பேரிடர் நிலவரத்தை கருத்தில் கொண்டு என்னால் மாநாட்டில் நேரடியாக பங்கேற்க இயலாது என கூறியதாக அந்நாட்டு அரசின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். 

;