உலகம்

img

டிரம்ப் மனைவிக்கு கொரோனா?

வாஷிங்டன்
உலகைத் தனது உள்ளங்கையில் வைத்து மிரட்டி வரும் கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ் தற்போது அமெரிக்காவை மையம் கொண்டுள்ளது. 

தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் கொரோனா வைரஸால் 54,916 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 784 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் உள்ள அனைத்து மாகாணங்களும் தீவிர கணிக்கணிப்பில் உள்ள நிலையில், அந்நாட்டின் ஜனாதிபதியான டிரம்ப்பின் மனைவி மெலானியா டிரம்ப்புக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. மருத்துவ பரிசோதனையின் படி மெலானியாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அந்த அறிக்கையில்,"டிரம்ப்புக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட அதே நாளில் மெலானியாவுக்கும்  பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் மெலானியாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டது" எனக் கூறப்பட்டுள்ளது. 

;