உலகம்

img

வங்க தேச மருத்துவமனையில் தீ விபத்து - 5 பேர் பலி

வங்க தேச மருத்துவமனையில் கொரோனா வார்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

வங்காளதேசத்தின் டாக்கா நகரில் குல்ஷான் சந்தை பகுதியையடுத்து அமைந்த மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு என தரை தளத்தில் தனி பிரிவு அமைக்கப்பட்டு உள்ளது.  அப்பகுதியில் நேற்றிரவு 10 மணியளவில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அந்த பகுதிக்கு சென்றனர்.  தொடர்ந்து அவர்கள் மீட்பு பணியையும் மேற்கொண்டனர்.  இதில், ஒரு பெண் மற்றும் 4 ஆண் என 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 
 ஏ.சி. வெடித்து அடுத்தடுத்து தீ பரவியதில் 5 பேரும் பலியாகி உள்ளனர் என ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 

;