உலகம்

img

கொரோனா தாக்குதல் எதிரொலி... பிரிட்டனில் 3 வாரங்களுக்கு ஊரடங்கு  

லண்டன் 
180-க்கும் மேற்பட்ட நாடுகளில் ருத்ரதாண்டவம் ஆடி வரும் கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ் தற்போது ஐரோப்பா கண்டத்தில் கடும் சேதாரத்தை ஏற்படுத்தி வருகிறது. இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கொரோனா வைரஸால் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ள நிலையில், கொரோனா பரவலைத் தடுக்க பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். 

பிரிட்டனில் முதல் கட்டமாக அவசர பிரகடனம் அறிவித்த நிலையில், தற்போது 3 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. உணவு, மருந்து ஆகிய அத்தியாவசியப் பொருட்களை வாங்க மட்டுமே மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரலாம் தவிர, பொது இடங்களில் இரண்டு நபர்களுக்கு மேல் கூடக்கூடாது. அரசின் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போரிஸ் ஜான்சன் தொலைக்காட்சி மூலம் பிரிட்டன் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

;