உலகம்

img

ரஷ்யா எண்ணெய் கப்பல் தீ விபத்தில் 3 பேர் பலி

ரஷ்யாவில் எண்ணெய் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதில் 3 பேர் பலியாகி உள்ளனர்.

ரஷ்யாவின், மக்காச்கலா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வோல்கா ஷிப்பிங் நிறுவனத்துக்கு சொந்தமான வி.எப்- டேங்கர் 16 என்ற கப்பலில் இருந்து, எண்ணெயை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த போது, திடீரென கப்பலின் என்ஜின் வெடித்தது சிதறியது. இதனால் தீ வேகமாக பரவியது. 

இதில், பணியில் இருந்த 12 பேரில், 3 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாகவும், 5 பேர் காயமடைந்துள்ளதாகவும், மேலும் 3 பேரை தேடும் பணி நடந்து வருவதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம், தெரிவித்துள்ளது. 
 

;