உலகம்

img

உணவுத் தேடி கிராமத்திற்குள் வந்த 56 பனிக்கரடிகள்!

உணவை தேடி 50க்கும் மேற்பட்ட பனிக்கரடிகள் ரஷ்யாவின் வடக்கு பகுதியில் உள்ள கிராமத்திற்குள் நுழைந்துள்ளதால், அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் சுகோட்கா பிராந்தியத்தில் உள்ள ரிர்காப்பி கிராமத்தில், உணவு தேடி 50க்கும் மேற்பட்ட பனிக்கரடிகள் நுழைந்துள்ளது. இதனால், அப்பகுதியில் அனைத்து பொது நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பொது இடங்கள் குடியிருப்பு வாசிகளைக் கரடிகள் தாக்காமல் இருக்க தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. 

ரிர்காப்பியில் இருந்து சுமார் 2.2கிமீ தூரத்தில் உள்ள கேப் என்ற இடத்தில் கரடிகள் வசிக்கின்றன. ஆனால் அந்த இடம் வழக்கத்தைக் காட்டிலும் அதிக வெப்பமாக இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் இருந்து சுமார் 56 பனிக்கரடிகள் கிராமத்துக்குள் நுழைந்துள்ளன. அதில் பெரிய மற்றும் சிறிய கரடிகளும், பெண் கரடிகளும் அதன் குட்டிகளும் அடங்கும் என்றும், பெரும்பாலான கரடிகள் மிகவும் ஒல்லியாகக் காணப்படுகிறது என்றும் ரிர்காப்பியில் கரடிகள் பாதுகாப்பு திட்டத்தின் தலைவராக இருக்கும் டட்யானா மினென்கோ தெரிவித்துள்ளார். 
 

;