திங்கள், ஆகஸ்ட் 3, 2020

உலகம்

img

மியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு - 50 பேர் பலி

மியான்மரில் பச்சை மரகதக்கல் வெட்டியெடுக்கும் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 50 பேர் பலியாகி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை  ஏற்படுத்தி உள்ளது
மியான்மர் நாட்டில் கச்சின் மாநிலத்தில் உள்ள ஹபகாந்த் பகுதியில் செயல்பட்ட சுரங்கத்தில் தொழிலாளர்கள் பச்சை மரகத கற்களை சேமிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெய்த கனமழை காரணமாக சேற்று அலை ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் இதுவரை 50 பேர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 

;