உலகம்

img

ஸ்பெயினில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா....  ஒரே நாளில் 2700 பேருக்குப் பாதிப்பு

மாட்ரிட் 
ஐரோப்பா கண்டத்தில் இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன், பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நாடுகள் கொரோனாவால் கடும் சேதாரத்தைச் சந்தித்துள்ளது. தற்போதைய நிலையில் இத்தாலி கொரோனாவை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வந்ததாகக் கூறப்பட்டாலும், தினமும் 1,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அங்கு மொத்த எண்ணிக்கை பாதிப்பு 2 லட்சத்தை நெருங்குகிறது. அதே போலப் பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.  

குறிப்பாக ஐரோப்பாவில் அதிக கொரோனா பாதிப்பைச் சந்தித்துள்ள நாடான ஸ்பெயினில் (2.32 லட்சம்) கொரோனா பரவல் மீண்டும் தலைதூக்குகிறது. கடந்த 12 மணிநேரத்தில் மட்டும் அங்கு 2,700 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 300-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில், பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 882 ஆக உயர்ந்துள்ளது. 84 ஆயிரத்து 400 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தினமும் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஸ்பெயின் நாட்டு மக்கள் கடும் அதிர்ச்சியுடன் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.  
 

;