உலகம்

img

விருந்துநிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு-9 பேர் பலி

பிரேசிலில் விருந்து நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிசூட்டில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
பிரேசில் நாட்டில் பாலோ பகுதியில் 5000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட விருந்து நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த வழியாக இரண்டு குற்றவாளிகளை காவல்துறையினர் துரத்திச் சென்றனர். அப்போது குற்றவாளிகள்  கூட்டத்திற்குள் புகுந்து போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் அங்கிருந்தவர்கள் அச்சமடைந்து அலறியடித்து ஓடினர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் பலியாகினர் மேலும் 7 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 
 

;