உலகம்

img

1.17 லட்சம் யூரோக்களுக்கு ஏலம் போன மாவீரன் நெப்போலியனின் பூட்ஸ்!

பிரான்சில் மாவீரன் நெப்போலியனின் பூட்ஸ், 1.17 லட்சம் யூரோக்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

கடந்த 1815-ஆம் ஆண்டில் வாட்டர்லூ போரில் தோல்வியடைந்த பின்னர், அட்லாண்டிக் தீவில் நாடுகடத்தப்பட்ட பிரெஞ்சு பேரரசனான நெப்போலியனை பின்தொடர்ந்த, ஜெனரல் ஹென்றி கேடியன் பெர்ட்ராண்ட் குறிப்பிட்ட இந்த காலணியை மீட்டுள்ளார். நெப்போலியனின் அந்த காலணி தற்போது பாரிஸில் 1.17 லட்சம் யூரோக்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. இந்த பூட்ஸானது பிரிட்டிஷ் அளவீட்டில் ஏழு எனவும் ஏலதாரர்கள் கூறினார். இந்த காலணிக்கு 50,000 முதல் 80,000 யூரோக்கள் வரையே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏலம் துவங்கி மிக விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆனால் இது அந்த பூட்ஸுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஆரம்ப மதிப்பீட்டை விட இரண்டு மடங்கு அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

;