உலகம்

img

காலத்தை வென்றவர்கள்... பிப்ரவரி 14

ஓவிய ஆளுமை ககனேந்திரநாத்

பிரிட்டிஷ் அரசு, இந்தியக் கலைஞர்களின் பொருட்களை சந்தையில் விற்கமுடியாதபடி வரியை ஏற்றி, தேங்கிய சரக்குகளை மலிவு விலைக்கு வாங்கி கொள்ளை லாபம் சம்பாதித்தன. அதேநேரத்தில் லாபம் பெறக்காரணமான ஏழை நெசவாளர்கள் வறுமை, பட்டினியால் மெல்ல இறப்பை நெருங்கிக்கொண்டிருந்த சமயம் அது. 

பசி,பட்டினியால் சிதைவுக்குள்ளான நெசவாளர்கள் கலைஞர்களின் வாழ்வைக் காக்க கொல்கத்தாவைச் சேர்ந்த ககனேந்திர தாகூர், இவரது சகோதரரான அபா நிந்த்ராநாத் மற்றும் அரச குடும்பத்தைச் சேர்ந்த பிஜாய் சந்திர மாஹ்தப் ஆகியோர் கொண்ட குழு முடிவு செய்தது. இதன் முதல் கௌரவ செயலாளராக ஓவியக்கலைஞர் ககனேந்திரநாத் தாகூர் பொறுப்பேற்றார். “சேலையில் வாத்து உள்ளிட்ட பேட்டர்ன் டிசைன்களை முதன்முதலில் பிரிண்ட் செய்து வங்காள கவர்னரின் மனைவி கார்மிசாயலை வியக்க வைத்தார். விரைவிலேயே தாகூரின் டிசைன் அனைவரது மனங்களையும் கொள்ளையடித்துவிட்டது” என்கிறார் பர்த்வான் அரசகுடும்பத்தைச் சேர்ந்த, சங்கத்தின் உறுப்பினரான நந்தினி மாஹ்தப்.

அன்றிலிருந்து இன்றுவரை பெங்கால் இண்டஸ்ட்ரீஸ் அமைப்பின் முக்கியப்பணி, அந்நியப்பொருட்களைத் தவிர்த்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது மட்டுமே. கிராமத்திலுள்ள கலைஞர்களை ஒருங்கிணைத்து அவர்களின் படைப்புகளை விற்க உதவியது இவ்வமைப்பு. 

ககனேந்திர தாகூர் மிகச்சிறந்த ஓவியர் மற்றும் கார்ட்டூனிஸ்ட்டும் கூட. அபனீந்திரநாத் மற்றும் ககன் வங்காள கலைப்பள்ளியில் படித்து சாதித்த முக்கிய படைப்பாளிகள். வாட்டர்கலர் ஓவியரான ஹரிநாராயண் பந்தோபாத்யாயாவிடம் ஓவிய அடிப்படைகளைக் கற்றவர், பின்னாளில் தனது சகோதரருடன் இணைந்து ‘இந்தியன் சொசைட்டி ஆப் ஓரியண்டல் ஆர்ட்’ அமைப்பைத் தொடங்கினார். ரூபம் (1906-1910) எனும் கலை இதழைத் தொடங்கி நடத்தினார். நாடகம், குழந்தைகள், இலக்கியம் ஆகியவற்றில் படைப்புகளைத் தந்த ககன், ரவீந்திரநாத் தாகூரின் ஜீவன்ஸ்மிருதி(1912) நூலைத் தனது பாணியில் ஓவியங்களாக வரைந்தது முக்கிய முயற்சி. கியூபிச முறைகளில் பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொண்ட இன்றும் நினைவுகூரப்படும் ஆளுமை ககனேந்திரநாத் தாகூர்.

 

;