உலகம்

img

கராச்சியில் விஷவாயு தாக்கி 6 பேர் பலி

பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் விஷவாயு தாக்கியதில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கராச்சி நகரில் ஞாயிற்றுக்கிழமை விஷ வாயு தாக்கியதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 12க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கியாமரி ஜெட்டி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சரக்கு கப்பலில் இருந்து ரசாயனங்களை வெளியேற்றும் போது விஷவாயு கசிவு ஏற்பட்டிருக்க  வாய்ப்புள்ளது என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

;