உலகம்

img

பர்கினோ பாசோ: கிறிஸ்தவ ஆலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 14 பலி

பர்கினோ பாசோ நாட்டில் கிறிஸ்தவ ஆலயத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் பரிதாபமாக பலியாகினர்.

ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நாடு பர்கினோ பாசோ நாட்டின் கிழக்குப்பகுதியின் ஹண்டொகுவோரா நகரில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தபோது உள்ளே நுழைந்த பயங்கரவாதிகள் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். அதன் பின்னர் ஆலயத்தில் இருந்து சிறிது தொலைவில் இருந்த பாதுகாப்பு படைகளையும் தாக்கினர். இதில் 3 அதிகாரிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை’ என அந்நாட்டு உள்ளூர் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. 
 

;