திங்கள், ஆகஸ்ட் 3, 2020

உலகம்

img

அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 61 ஆயிரம் பேருக்கு கொரோனா...

நியூயார்க் 
வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா கொரோனாவால் கடுமையமான பாதிப்பை சந்தித்து வருகிறது. குறிப்பாக உலகின் கொரோனா மையமாக உள்ள அமெரிக்காவில் கொரோனா பரவல் ஏற்றம், இறக்கமாக உள்ளது. சில வாரங்கள் குறைகிறது, சில வாரங்கள் மின்னல் வேகத்தில் அதிகரிக்கிறது. இதனால் அமேரிக்காவின் கொரோனா பரவல் வேகம் கணிக்க முடியாத அளவிற்கு தாறுமாறாக உள்ளது. 

இந்நிலையில், அங்கு இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 61,848 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 31.59 லட்சமாக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 890 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1.34 லட்சமாக அதிகரித்துள்ளது. இதுவரை அமெரிக்காவில் 13.93 லட்சம் பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 

கொரோனாவால் உருக்குலைந்துள்ள நியூயார்க் நகரத்தில் தினசரி பாதிப்பு விகிதம் சற்று குறந்துள்ளது. அனால் கலிபோர்னியா, டெக்சாஸ், புளோரிடா ஆகிய மாகாணங்களில் தினசரி பாதிப்பு 7 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்து உள்ளது. மேலும் அமெரிக்காவின் மற்ற மாகாணங்களில் தினசரி பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருவதால் அந்நாட்டு அரசுக்கு புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது.  

;