உலகம்

img

நியூசிலாந்தில் நிலநடுக்கம்


நியூசிலாந்தில்  நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். 
நியூசிலாந்து நாட்டில் உள்ள வடக்கு தீவின் கிழக்கு பகுதியில், நேற்று இரவு 8.22 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 5.5 ரிக்டர் அளவில் பதிவான  நிலநடுக்கம் சுமார் 10 கி.மீ ஆழத்தில் இருந்து பதிவாகியிருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

;