செவ்வாய், ஆகஸ்ட் 11, 2020

உலகம்

img

துபாயில் இந்திய இளைஞர் தற்கொலை 

துபாய் 
கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் ஒருவர் (பெயர் இன்னும் வெளியாகவில்லை) தனது மூத்த சகோதரரின் குடும்பத்துடன் துபாயில் வசித்து வந்துள்ளார். இவர் தான் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள ஓயாசிஸ் சிலிக்கான் வளாக அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதிக்கு சென்று வாடகைக்கு வீடு பார்க்க வந்ததாகக் கூறி வீட்டுச் சாவிகளை வாங்கி சென்றுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் 24-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாகத் துபாய் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 

சிசிடிவி காட்சிகள் அடிப்படையிலும், தடயவியல் மருத்துவர்கள் கூறியதன் அடிப்படையிலும், இது தற்கொலை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வளைகுடா செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் தற்கொலைக்கான காரணங்கள் எதுவும் தெரியவில்லை. கடந்த திங்கள் கிழமை நிகழ்ந்த இந்த சம்பவம் தற்போது தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

;