உலகம்

img

கொரோனா பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்குகிறது

தில்லி 
உலகை உலுக்கி வரும் கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைப் பதம் பார்த்து வருகிறது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு விதிக்கப்பட்ட பொழுதிலும் கொரோனா வைரஸ் ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. 

தற்போதைய நிலையில்  உலகில் மொத்தம் 16 லட்சத்திற்கும் அதிகமான மக்களைப் பாதிப்படையச் செய்துள்ள இந்த கொடிய வைரஸ் தற்போது அமெரிக்காவில் மையம் கொண்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும் 4 லட்சத்து 68 ஆயிரம் பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அங்கு 16,697 பேர் (காலை நிலவரம்) பலியாகியுள்ள நிலையில், பலி எண்ணிக்கையில் ஸ்பெயினை (15447) பின்னுக்குத்தள்ளி 2-வது இடத்தை பிடித்துள்ளது. இத்தாலி (18,279) தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 

உலகில் தினமும் சராசரியாக 4,000 பேர் வீதம் கொரோனாவுக்கு பலியாகி வருவதால் பலி எண்ணிக்கை விரைவில் ஒரு லட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் உலகம் முழுவதும் 
கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 95,736 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.    
 

;