உலகம்

img

தாய்லாந்து: துப்பாக்கி சூட்டில் 15 பேர் பலி

தாய்லாந்தில் துப்பாக்கி ஏந்திய நபர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 15 பேர் பலியாகி உள்ளனர். 
தாய்லாந்தில் இஸ்லாமிய சமூகத்தினர் அதிகமாக வசிக்கும் தென் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் அடையாளம் தெரியாத நபர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 15 பேர் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இச்சம்பவம் குறித்து அந்நாட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
தாய்லாந்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனக் கலவரத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் சுமார் 7,000 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

;