உலகம்

img

நெல்சன் மண்டேலாவின் மகள் ஜிண்ட்ஸி காலமானார்... 

ஜோகன்னஸ்பர்க்
தென் ஆப்பிரிக்காவின் தேசத்தந்தையும், நிறவெறிக்கு எதிராக போராடிய தலைவர்களுள் முக்கியமானவருமான முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் மகள் ஜிண்ட்ஸி மண்டேலா (59). இவர் டென்மார்க் நாட்டின் தென் ஆப்பிரிக்கா தூதராக பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில் நேற்று மாலை (ஜூலை 12) நாட்டின் முக்கிய நகரங்களுள் ஒன்றான ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள மருத்துவமனையில் ஜிண்ட்ஸி மண்டேலா காலமானார். எனினும் ஜிண்ட்ஸி-யின் மரணத்திற்கான காரணம் உடனடியாக வெளியிடப்படவில்லை. ஜிண்ட்ஸி மண்டேலாவுக்கு கணவர் மற்றும் நான்கு பிள்ளைகளும், பேரக்குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

;