உலகம்

img

18,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய டாய்ச் வங்கி முடிவு!

பன்னாட்டு வங்கியான டாய்ச் வங்கியில், நிதி நெருக்கடி அதிகரித்து வருவதால், 18,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

பொருளாதார மந்த நிலை, வேலையின்மை, பணி நீக்கம் போன்ற பிரச்சனைகள் சர்வதேச அளவிலும் அதிகரித்து வரும் நிலையில், ஜெர்மனியின் ஃப்ராங்க்ஃபர்ட் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டாய்ச் வங்கியில், கடந்த மூன்று ஆண்டு காலமாக ஏற்பட்ட இழப்பால், மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வங்கியின் வணிக பிரிவான முதலீட்டு பிரிவை மறு சீரமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், இவ்வாறு மறுசீரமைப்பதன் மூலம் நிலையான வருமானத்தை பெற்று நஷ்டத்தை குறைக்க முடியும் என்றும் அறிவித்துள்ளது. இந்நிலையில், 18,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக டாய்ச் வங்கி அறிவித்துள்ளது. என்றும் வங்கி அறிவித்துள்ளது.

இந்த வங்கி வரும் டிசம்பர் மாதத்துக்குள் இது குறித்து ஒரு முக்கிய முடிவு எடுக்கும் என்றும், இதற்கு நிதி கட்டுப்பாட்டாளர்களின் ஒப்புதல் தேவை என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த பணி நீக்கமானது வரும் 2021-ஆம் ஆண்டு இறுதிக்குள் இருக்கும் என்றும், இந்த பணி நீக்கத்தால் ஜெர்மனி தவிர மற்ற இதன் கிளைகள் இருக்கும் அனைத்து பகுதிகளிலும் இதன் பாதிப்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 

;