உலகம்

img

வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்திய ஜெர்மன் விவசாயி!

ஜெர்மனியை சேர்ந்த விவசாயி ஒருவர், தனது காதலியிடம் வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்திய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜெர்மனி உள்ள ஹட்டென்பெர்க் நகரைச் சேர்ந்தவர் ஸ்டெஃபென் ஸ்வார்ஸ் (வயது 32). பகுதி நேர விவசாயியான இவர் தனது காதலியிடம் அவரது திருமணம் விருப்பத்தை  தெரிவிக்க வித்தியாசமான முயற்சியை கையாண்டார். தனது விளை நிலத்தில் ”என்னை திருமணம் செய்து கொள்வாயா” என மிகப்பெரிய எழுத்துகளை வரைந்து, அப்பகுதியை தவிர்த்து மற்ற பகுதிகளில் விதை தூவி. பயிர்கள் வளர்த்துள்ளார். இதையடுத்து தனது காதலிக்கு, ட்ரோன் மூலம் அப்பகுதியை பார்க்க செய்த நிலையில், அந்த பெண் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். இந்த இடத்தை கூகுள் ஏர்த் மூலம் புகைப்படம் எடுக்கப்பட்டு, தற்போது வைரல் ஆகி வருகிறது. 

இது குறித்து இந்த விவசாயி கூறுகையில், ‘கூகுள் எர்த்தில் எனது விளைநிலம் காணப்படுவதை அறிந்து ஆச்சரியம் அடைந்தேன். கனடாவில் வசிக்கும் எனது அத்தை, செயற்கைக்கோள் கேமரா புகைப்படத்தை ஆன்லைனில் கண்டறிந்த பின்னர் எனக்கு ஸ்கிரீன் ஷாட் செய்து அனுப்பினார்’ என கூறினார்.
 

;