உலகம்

img

வர்த்தக முன்னுரிமை நாடுகள் பட்டியலிலிருந்து ஜப்பான் நீக்கம்

சியோல், ஆக.13 - ஜப்பான் மற்றும் தென்கொரியா இடையே வர்த்தக ரீதியிலான பிரச்சனை நீடிக்கிறது. தென்கொரியாவின் வர்த்தகத்தைக் கீழிறக்க ஜப்பான் அண்மையில் நடவடிக்கை மேற்கொண்டது. இதனை கண்டித்து தென்கொரியாவில் ஜப்பானுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன. இந்நிலையில் வர்த்தகத்தில் முன்னுரிமை பெறும் நாடுகளின்  பட்டியலில் இருந்து ஜப்பானை தென்கொரியா நீக்கியுள்ளது. இதுகுறித்து தென்கொரியாவின் வர்த்தக அமைச்சர் சங் யுன் மோ கூறுகையில் “எங்களது வர்த்தக முன்னுரிமைப் பட்டி யலில் இடம்பெற்றுள்ள 29 நாடுகளிலிருந்து ஜப்பானை நீக்குகிறோம். ஏற்றுமதிப் பொருட்களில் சர்வதேச வர்த்தக விதிமுறைகளை ஜப்பான் மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது” என தெரிவித்தார்.

;