உலகம்

img

கொரோனா பாதிப்பு: களையிழந்த ரம்ஜான்

ஜகார்த்தா:
கொரோனா தொற்று எண்ணிக்கை பல நாடுகளில் அதிகரித்து வருவதால் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. திங்களன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால், தென்கிழக்கு ஆசிய நாடுகளில்உள்ள இஸ்லாமியர்களை, இந்தாண்டு ரம்ஜான் பண்டிகை மகிழ்விக்கக் கூடியதாக இல்லை என்கின்றனர்.

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,515 ஆக உள்ளது. இதில் 501 பேர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான இஸ்லாமியர்கள் கூறுகையில், ஊரடங்கு உத்தரவால் நாங்கள் உறவினர்களுடன் வீடியோ கால் மூலமாகத்தான் வாழ்த்துக்களை பரிமாற வேண்டும். மசூதிகளில் வழிபாடு நடத்த அனுமதி இல்லை. குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்க முடியாது என்றனர்.இந்தோனேசியாவைப் போல் பெரும்பாலான இஸ்லாமியர்களை கொண்ட மலேசியாவிலும் இதேநிலை தான் உள்ளது எனவும் தெரிவித்தனர்.

;