உலகம்

img

சூரிச்சில் திடீரென ஒளிரும் பச்சை நிறத்தில் மாறிய நதி

சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் மாகாணத்தில் உள்ள லிம்மாத் நதி திடீரென ஒளிரும் பச்சை நிறத்தில் காட்சி அளித்த சம்பவம் நடந்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தை கடந்து செல்லும் லிம்மாத் என்ற நதி திடீரென ஒளிரும் பச்சை நிறத்தில் காட்சி அளித்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டபோது, நதியில் பச்சை நிற சாயத்தை கலந்தது எக்ஸ்ட்டிங்ஷன் ரெபெல்லியன் என்ற சுற்றுச்சூழல் அமைப்பை சேர்ந்த ஆர்வலர்கள் என்று தெரியவந்தது.

இது குறித்து அந்த அமைப்பிடம் விசாரணை மேற்கொண்ட போது, சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து கவனம் ஈர்க்கவே, அந்த பச்சை நிற சாயத்தை நதியில் கலந்ததாகவும், இதற்கு யுரானின் என்னும் சாயத்தை பயன்படுத்தியதாகவும், உணவில் பயன்படுத்தப்படும் உப்பில் உள்ள அதே அளவிலான நச்சுத்தன்மையை கொண்டதுதான் இந்த யுரானின் சாயம் என்றும் தெரிவித்துள்ளனர். 


 

;