உலகம்

img

உலக அளவில் 40 வினாடிகளுக்கு ஒருவர் தற்கொலை

உலக அளவில் 40 வினாடிகளுக்கு  ஒருவர் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்பது உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் மூலம் தெரிய வந்துள்ளது. 
உலக சுகாதார நிறுவனம் 2010 முதல் 2016 வரை நடந்த தற்கொலைகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் 40 வினாடிகளுக்கு ஒருவர் சர்வதேச அளவில் தற்கொலை செய்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது. 
மிகக் குறைந்த, மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் தற்கொலைகள் அதிக அளவில் உள்ளது.  இலங்கை, லுமுவேனியா, லெசோதோ, உகாண்டா, தென்கொரியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் அதிக தற்கொலை சம்பவங்கள் நடக்கின்றன. இங்கு 1 லட்சம் பேருக்கு 13.7 சதவீதம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். பொதுவாக பெண்களை விட ஆண்கள்தான் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். 
ஆனால் வங்காளதேசம், சீனா, லெகோதோ, மொராக்கோ மற்றும் மியான்மரில் தற்கொலை செய்பவர்களில் ஆண்களை விட பெண்களே அதிகம் ஆவர். இவர்களில் இளம் வயதினர் அதிக அளவில் உள்ளனர். மொத்தத்தில் தற்கொலை செய்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 45 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர்.
இவர்களுக்கு அடுத்த படியாக தற்கொலை செய்பவர்கள் பட்டியலில் 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர்.  மொத்தத்தில் ஆண்டுக்கு 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது கொலை மற்றும் மார்பக புற்றுநோயால் இறப்பவர்களை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 
இதுகுறித்து உலக சுகாதார நிறுவனர் டைரக்டர் ஜெனரல் டெட்ராஸ் அதானம் கெப்ரிய சீஸ் உலக நாடுகள் தற்கொலையை தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தேசிய சுகாதாரம் மற்றும் தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு கல்வி திட்டங்களை உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 
 

;