உலகம்

img

பயணத்தைத் தொடங்கியது உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பல்

தியான்ஜின்,ஜூலை 9- உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான எம்.எஸ்.சி. குல்சன்  (MSC GULSUN) தனது முதல் பயணத்தை சீனாவின் தியான்ஜின் துறைமுகத்தில் இருந்து தொடங்கியது. 400 மீட்டர் நீளமும், 62 மீட்டர் அகலமும் கொண்ட இந்தக் கப்பலை, தென்கொரியாவின் சாம்சங் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கட்டமைத்துள்ளது.  சுவிட்சர்லாந்தில் உள்ள எம்.எஸ்.சி. என்ற சரக்கு போக்கு வரத்து நிறுவனத்திற்காக கட்ட மைக்கப்பட்ட இந்தக் கப்பல், அதனுடைய எடையையும் சேர்த்து மொத்தமாக 2 லட்சத்து 24 ஆயிரத்து 900 டன் எடையை சுமக்க வல்லது. சீனாவின் வடகிழக்கே உள்ள தியான்ஜின் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த எம்.எஸ்.சி. குல்சன், தற்போது வடமேற்கு ஐரோப்பா நோக்கி தனது முதல் பயணத்தை தொடங்கியுள்ளது. இரும்பு, மரச்சாமான்கள், வேதிப் பொருட்கள் அடங்கிய கண்டெய்னர்களை அது சுமந்து செல்கிறது.

;