உலகம்

img

சீன வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை

பெய்ஜிங், ஆக.12- மூன்று நாள் அரசு முறைப் பயணமாக சீனா சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு வெளி யுறவுத்துறை அமைச்சரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். ஜெய்சங்கர் பயணத்தின் 2வது நாளான திங்களன்று பெய்ஜிங்கில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவுகள் குறித்தும் முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக தெரிகிறது. முன்னதாக ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப் பட்டு, அம்மாநிலம் 2 யூனியன் பிரதேசங்க ளாக பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட தற்கு சீனா அதிருப்தி தெரிவித்திருந்தது. தொடர்ந்து சீனா சென்ற பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சீனாவின் ஆதரவை கோரி யிருந்தார். இந்த நிலையில் இந்திய வெளி யுறவுத்துறை அமைச்சர் சீனா சென்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரை  சந்தித்து பேச்சு நடத்தியிருப்பது, முக்கி யத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 2009ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை சீனாவுக்கான இந்திய தூதராக பணியாற்றிய ஜெய்சங்கர், வெளியுற வுத்துறை அமைச்சராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக சீனாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

;